By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, May 30, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

தலங்கம பகுதியில் இணையதளம் வழி சட்டவிரோத நடவடிக்கை – பெண் ஒருவர் உட்பட 37 சீனப் பிரஜைகள் கைது

news team
Last updated: May 2, 2026 6:46 pm
By news team
Share
1 Min Read
தலங்கம பகுதியில் இணையதளம் வழி சட்டவிரோத நடவடிக்கை – பெண் ஒருவர் உட்பட 37 சீனப் பிரஜைகள் கைது
SHARE

தலங்கம, கொஸ்வத்தை பகுதியில் இணையதளம் ஊடாக சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் உட்பட 37 சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.வலான மத்திய ஊழல் ஒழிப்புப் படைப்பிரிவு மற்றும் தலங்கம பொலிஸாரின் ஊழல் ஒழிப்புப் பிரிவு என்பன இணைந்து முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.வாடகைக்கு எடுக்கப்பட்ட வீடொன்றைச் சோதனையிட்ட போது அங்கிருந்து 35 டெக்ஸ்டொப் கணினிகள், 37 டெப் கணினிகள், 147 கைபேசிகள், 100 சிம் அட்டைகள் மற்றும் 2,100 சட்டவிரோத சிகரெட்டுகள் என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளன.கைது செய்யப்பட்ட 37 சீனப் பிரஜைகளும் மூன்று மாத கால சுற்றுலா விசா மூலம் இலங்கைக்கு வருகை தந்து, சட்டவிரோதச் சேவைகளை வழங்கியுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.சந்தேகநபர்கள் இணையதளம் ஊடாக சட்டவிரோத பணப் பரிமாற்றங்களில் ஈடுபட்டனரா, அல்லது ஹேக்கர்களாக செயற்பட்டார்களா அல்லது வேறு ஏதேனும் இணையதளக் குற்றங்களில் ஈடுபட்டனரா என்பது குறித்து மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.மேலும், மேலதிக விசாரணைகளுக்காக குறித்த கணினிகள் மற்றும் கைபேசிகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.அத்துடன் குறித்த அனைத்து உபகரணங்களுடன் அந்த வீடு பொலிஸாரால் சீல் வைக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 37 சீனப் பிரஜைகளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலங்கம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, அவர்கள் கடுவலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்

TAGGED:arrestCyber Attackmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கோட்டாபய பதவியேற்ற ஒரே வாரத்தில் பிள்ளையானை பிணையில் எடுக்க திட்டம் வாக்குமூலம் வழங்கிய அசாத் மௌலானா

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்னும் பிள்ளையான் சிறையிலிருந்தபோது, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

யாழ் மத்திய பேருந்து நிலையம் அருகே கரு மீட்பு – கண்காணிப்பு கேமரா ஆதாரங்களுடன் விசாரணை செய்ய நீதவான் உத்தரவு
உள்நாடு

யாழ் மத்திய பேருந்து நிலையம் அருகே கரு மீட்பு – கண்காணிப்பு கேமரா ஆதாரங்களுடன் விசாரணை செய்ய நீதவான் உத்தரவு

By news team
நிதி மோசடி குற்றச்சாட்டு: நிதிக் குற்ற விசாரணை பிரிவுக்கு மேலும் கால அவகாசம் கோரிய ஷிரந்தி
உள்நாடு

நிதி மோசடி குற்றச்சாட்டு: நிதிக் குற்ற விசாரணை பிரிவுக்கு மேலும் கால அவகாசம் கோரிய ஷிரந்தி

By news team
ஹோர்முஸ் நீரிணையை முற்றுகையிடும் அமெரிக்க திட்டம் – அதையும் மீறி ஈரான் கப்பல்கள் கடந்து சென்றதாக தகவல்
உலகம்

ஹோர்முஸ் நீரிணையை முற்றுகையிடும் அமெரிக்க திட்டம் – அதையும் மீறி ஈரான் கப்பல்கள் கடந்து சென்றதாக தகவல்

By news team
கிளிநொச்சியில் 9 வீடுகளில் திருட்டு: இளம் தம்பதியர் கைது
உள்நாடு

கிளிநொச்சியில் 9 வீடுகளில் திருட்டு: இளம் தம்பதியர் கைது

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?