By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Aug 21, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

தாய்லாந்திலிருந்து போதைப்பொருள் கடத்திய 22 தேரர்களும் நீதிமன்றம் விளக்கமறியல் உத்தரவு

news team
Last updated: May 2, 2026 6:19 pm
By news team
Share
1 Min Read
தாய்லாந்திலிருந்து போதைப்பொருள் கடத்திய 22 தேரர்களும் நீதிமன்றம் விளக்கமறியல் உத்தரவு
SHARE

தாய்லாந்திலிருந்து ‘குஷ்’ மற்றும் ‘ஹேஷ்’ வகை போதைப்பொருட்களை இலங்கைக்குக் கடத்தி வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 22 தேரர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.இன்று (02) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குறித்த 22 தேரர்களையும் வரும் 12-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.கடந்த ஏப்ரல் 25-ஆம் திகதி தாய்லாந்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த போது, 112 கிலோகிராம் போதைப்பொருளுடன் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.’அமிதானந்த’ எனும் தேரர் ஒருவரே இந்த கடத்தலை வழிநடத்தியிருந்தாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. களுத்துறை பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் மறைந்திருந்த போது கைது செய்யப்பட்ட இவர், நாளை (03) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.குறித்த தேரரின் வழிகாட்டலில் இதற்கு முன்னரும் போதைப்பொருள் கடத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பில் இவருக்கு உதவியாக இருந்த நபர் ஒருவர் அத்துருகிரிய பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் சந்தேகநபர்களை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்த பின்னரே இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.

TAGGED:arrestmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மொனராகலையில் கோர விபத்து: 5 பேர் உயிரிழப்பு

மொனராகலை, கும்புக்கான பகுதியில் இன்று (21) காலை டிப்பர் லொறியும் டிராக்டரும் மோதிய விபத்தில் 5…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

இஸ்ரேல்–அமெரிக்க தாக்குதலில் ஈரானில் 181 சிறுவர்கள் பலி 1இ097 பொதுமக்கள் உயிரிழப்பு
உலகம்

இஸ்ரேல்–அமெரிக்க தாக்குதலில் ஈரானில் 181 சிறுவர்கள் பலி 1097 பொதுமக்கள் உயிரிழப்பு

By news team
மூன்று குழந்தைகளின் தாய் படுகொலை: கணவன் பொலிஸ் நிலையத்தில் சரண்
உள்நாடு

மூன்று குழந்தைகளின் தாய் படுகொலை: கணவன் பொலிஸ் நிலையத்தில் சரண்

By news team
அம்பாறையில் 800 லீற்றர் டீசல் பதுக்கல் – எரிபொருள் நிலைய ஊழியர் கைது
உள்நாடு

அம்பாறையில் 800 லீற்றர் டீசல் பதுக்கல் – எரிபொருள் நிலைய ஊழியர் கைது

By news team
கற்பித்தல் அனுபவம் கொண்ட பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைக்க அரசாங்கம் திட்டம்
உள்நாடு

கற்பித்தல் அனுபவம் கொண்ட பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைக்க அரசாங்கம் திட்டம்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?