By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, May 30, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உலகம்

ஹோர்முஸ் நீரிணை திறக்கவே முடியாது – ஈரான் கடும் எச்சரிக்கை அமெரிக்காவுக்கு

news team
Last updated: April 23, 2026 7:05 am
By news team
Share
1 Min Read
ஹோர்முஸ் நீரிணை திறக்கவே முடியாது – ஈரான் கடும் எச்சரிக்கை அமெரிக்காவுக்கு
SHARE

அமெரிக்கா தனது கடற்படை முற்றுகையைத் தொடர்ந்து நீட்டித்து வரும் நிலையில் ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது என்பது சாத்தியமற்ற ஒன்று எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த விடயத்தை ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகெர் காலிபாப் தெரிவித்துள்ளார்.இது குறித்துத் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் அவர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது, அமெரிக்கா ஒருபுறம் போர்நிறுத்தம் என்று கூறிக்கொண்டு மறுபுறம் கடற்படை முற்றுகையின் மூலம் உலகப் பொருளாதாரத்தைப் பிணைக் கைதியாக வைத்திருப்பதாகக் கடுமையாகச் சாடியுள்ளார்.இத்தகைய செயல்பாடுகள் தொடரும் வரை முழுமையான போர்நிறுத்தம் என்பது அர்த்தமற்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அமெரிக்காவின் இத்தகைய பகிரங்கமான போர்நிறுத்த மீறல்கள் நிலவும் சூழலில் ஹார்முஸ் நீரிணையைத் திறப்பது குறித்துப் பேசுவதற்கே இடமில்லை எனவும் மேலும் அனைத்து முனைகளிலும் சீயோனிச (இஸ்ரேல்) போர் வெறி நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.இராணுவ ஆக்கிரமிப்பின் மூலமாகவோ அல்லது அதிகார மிரட்டல்கள் மூலமாகவோ ஈரான் மீது எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என்பதை அவர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.ஈரானிய தேசத்தின் உரிமைகளை சர்வதேச சமூகம் அங்கீகரிப்பதே இந்தப் பதற்றத்தைத் தணிப்பதற்கான ஒரே வழி என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

TAGGED:IranIran-Israel Warmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கோட்டாபய பதவியேற்ற ஒரே வாரத்தில் பிள்ளையானை பிணையில் எடுக்க திட்டம் வாக்குமூலம் வழங்கிய அசாத் மௌலானா

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்னும் பிள்ளையான் சிறையிலிருந்தபோது, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

நாணய சந்தையில் அதிர்ச்சி – இலங்கை ரூபாய் விலை குறைவு
வணிகம்

நாணய சந்தையில் அதிர்ச்சி – இலங்கை ரூபாய் விலை குறைவு

By news team
வெளிநாட்டு சுற்றுலாப் பெண் மீது பாலியல் வன்கொடுமை- 2 வழிகாட்டிகள் கைது
உள்நாடு

வெளிநாட்டு சுற்றுலாப் பெண் மீது பாலியல் வன்கொடுமை- 2 வழிகாட்டிகள் கைது

By news team
முச்சக்கரவண்டியில் கடத்தப்பட்ட மாணவியை விரட்டிப் பிடித்து மீட்ட தந்தை
உள்நாடு

முச்சக்கரவண்டியில் கடத்தப்பட்ட மாணவியை விரட்டிப் பிடித்து மீட்ட தந்தை

By news team
யாழ் பள்ளிவாசலில் தொழுகை நேரத்தில் பரபரப்பு – வாளுடன் இளைஞனை துரத்திய நபர்
உள்நாடு

யாழ் பள்ளிவாசலில் தொழுகை நேரத்தில் பரபரப்பு – வாளுடன் இளைஞனை துரத்திய நபர்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?