By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Apr 4, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

மட்டக்களப்பில் பெண்களை கடத்தி நகை கொள்ளை – சந்தேகநபர்கள் விளக்கமறியலில்

news team
Last updated: April 2, 2026 9:42 pm
By news team
Share
1 Min Read
மட்டக்களப்பில் பெண்களை கடத்தி நகை கொள்ளை – சந்தேகநபர்கள் விளக்கமறியலில்
SHARE

மட்டக்களப்பில் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து கடத்தி, நகைகளை கொள்ளையிட்ட பின்னர் அவர்களை கிணற்றில் வீசிய கொடூரச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.காஞ்சரம்குடா பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண், அவரது 34 வயதுடைய கணவர் மற்றும் 22 வயதுடைய சகோதரர், முச்சக்கரவண்டி சாரதி ஆகியோரை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.அத்துடன் கொள்ளையிடப்பட்ட நகைகளை கொள்வனவு செய்த குற்றச்சாட்டில் ஏற்கனவே விளக்கமறியலில் இருந்த இரு நகைக்கடை உரிமையாளர்களும் 10ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.மயக்க மருந்து வழங்கிய குற்றச்சாட்டில் கொழும்பு – வத்தளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட நபரை, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பொலிஸ் தடுப்புக் காவலில் 3 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு பஸ் நிலையத்தில் வைத்து மயக்க மருந்து கொடுத்து நகைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட தரப்பினரைக் கொண்டு சந்தேக நபர்களை அடையாளம் காணும் அடையாள அணிவகுப்பு இன்று நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டது. மாவட்டத்தையே உலுக்கிய இச்சம்பவம் குறித்து கிழக்கு மாகாண குற்றத் தடுப்புப் பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.சந்தேக நபர்களிடமிருந்து ஏற்கனவே மயக்க மருந்துகள், கார், முச்சக்கரவண்டி மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. ​மட்டக்களப்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் அரங்கேற்றப்பட்ட இந்த மனிதாபிமானமற்ற செயல்கள் குறித்து மேலதிக சாட்சியங்களைத் திரட்டும் பணிகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

TAGGED:muthalvanSri Lanka Police Investigationtamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

நாடளாவிய விசேட சோதனை நடவடிக்கை – 512 பேர் கைது

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்காக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

நாட்டின் பல இடங்களில் பிற்பகலில் மழை பெய்யும் சாத்தியம்
உள்நாடு

நாட்டின் பல இடங்களில் பிற்பகலில் மழை பெய்யும் சாத்தியம்

By news team
திருமணம் என்ற பெயரில் சீனாவுக்குக் கடத்தப்படும் நேபாளப் பெண்கள் – மனிதக் கடத்தல் கும்பல் அம்பலம்
உலகம்

திருமணம் என்ற பெயரில் சீனாவுக்குக் கடத்தப்படும் நேபாளப் பெண்கள் – மனிதக் கடத்தல் கும்பல் அம்பலம்

By news team
நாளை மீண்டும் நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பு - அரச மருத்துவமனைகளின் சேவைகள் முடங்கும் அபாயம்
உள்நாடு

நாளை மீண்டும் நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பு – அரச மருத்துவமனைகளின் சேவைகள் முடங்கும் அபாயம்

By news team
பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்கவின் பெயரைப் பயன்படுத்தி பண மோசடி – பொது எச்சரிக்கை
உள்நாடு

பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்கவின் பெயரைப் பயன்படுத்தி பண மோசடி – பொது எச்சரிக்கை

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?