By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Apr 4, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

மட்டக்களப்பில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட பெண் – வெளியான புதிய தகவல்

news team
Last updated: March 21, 2026 3:27 pm
By news team
Share
1 Min Read
மட்டக்களப்பில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட பெண் – வெளியான புதிய தகவல்
SHARE

மட்டக்களப்பு நெல்லிக்காடு பகுதியில் பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. நேற்று (20) அப்பகுதிவாசி ஒருவருக்கு கிணற்றுக்குள் இருந்து கேட்ட முனகல் சத்தம் காரணமாக மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே அந்தப் பெண் கண்டுபிடிக்கப்பட்டார்.தற்போது அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.26 வயதுடைய அந்தப் பெண்ணை கடந்த 19ஆம் திகதி ஒரு குழுவினர் கடத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.கடத்தலின் போது தப்பிச் சென்றிருந்த அவரது மகள், கொதியபுலை வயல் பகுதியில் இருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.அவரும் மருத்துவ பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதேவேளை, குறித்த பெண்ணை மீட்டபோது அதே கிணற்றுக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்ட மற்றுமொரு பெண்ணின் சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. அதன் பிரேத பரிசோதனை இன்று நடைபெறவுள்ளது.இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில், கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

TAGGED:crimemuthalvanSri Lanka Police Investigationtamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கிளிநொச்சி தர்மபுரம் விபத்து – இரண்டு இளைஞர்கள் பலி

கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

காதலரை திருமணம் செய்த மகள் “இறந்ததாக” அறிவிப்பு – உருவ பொம்மைக்கு இறுதிச்சடங்கு நடத்திய குடும்பம்
இந்தியா

காதலரை திருமணம் செய்த மகள் “இறந்ததாக” அறிவிப்பு – உருவ பொம்மைக்கு இறுதிச்சடங்கு நடத்திய குடும்பம்

By news team
அதிவேக நெடுஞ்சாலைகள், சாதாரண வீதிகள்: ஆசனப்பட்டி அணியாவிட்டால் தண்டனை
உள்நாடு

அதிவேக நெடுஞ்சாலைகள், சாதாரண வீதிகள்: ஆசனப்பட்டி அணியாவிட்டால் தண்டனை

By news team
2026-ல் பாடசாலை நேரம் நீட்டிக்கப்படாது – கல்வி அமைச்சு
உள்நாடு

2026-ல் பாடசாலை நேரம் நீட்டிக்கப்படாது – கல்வி அமைச்சு

By news team
கொழும்பு–பாதுக்க பகுதியில் ஆசிரியர் ஒருவர் சடலமாக மீட்பு – பொலிஸார் விசாரணை
உள்நாடு

கொழும்பு–பாதுக்க பகுதியில் ஆசிரியர் ஒருவர் சடலமாக மீட்பு – பொலிஸார் விசாரணை

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?