By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Apr 4, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

நுவரெலியா ‘World’s End’ விபத்து: செல்பி எடுக்கச் சென்ற மாணவி கீழே விழுந்து மீட்பு

news team
Last updated: March 19, 2026 7:59 pm
By news team
Share
2 Min Read
நுவரெலியா ‘World’s End’ விபத்து: செல்பி எடுக்கச் சென்ற மாணவி கீழே விழுந்து மீட்பு
SHARE

நுவரெலியாவில் உள்ள ஹோட்டன் சமவெளி ‘உலக முடிவு’ (World’s End) சுற்றுலாத் தளத்தில் கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தைச் சேர்ந்த 23 வயதான மாணவி ஒருவர் செல்பி எடுக்கச்சென்ற போது சுமார் 50 அடி உயரம் கொண்ட பாறையிலிருந்து இன்று (19) காலை தவறி கீழே வீழ்ந்துள்ளார். அவர் ஒரு மரக் கிளையில் தொங்கிக்கொண்டிருந்த நிலையில் பல மணிநேர தேடுதல் மீட்பு நடவடிக்கைக்குப் பிறகு அவர் பாதுகாக்க மீட்கப்பட்டார் என ஹோட்டன் சமவெளி ‘உலக முடிவு’ (World’s End) சுற்றுலாத் தளத்தில் முகாமையாளர் மஞ்சுளா மொனரதென்ன தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். கொழும்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் குழு இன்று நுவரெலியா, ஹோட்டன் சமவெளி ‘உலக முடிவு’ சுற்றுலாத் தளத்தில் பிரதான பாறையைப் பார்வையிட சென்ற போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.குறித்த மாணவி செல்பி’ எடுக்கச் முயன்ற போது தவறி கீழே விழுந்து ஒரு கிளையில் தொங்கிக்கொண்டிருந்த நிலையில் ஹோட்டன் சமவெளி தேசிய வனப் பூங்காவைச் சேர்ந்த ஒரு சாரதி அவரை கண்டுபிடித்துள்ளார். அதனை பார்த்தவுடன் ஆபத்தைப் பொருட்படுத்தாமல், கீழே இறங்கி தொங்கிக்கொண்டிருந்த கிளையிலிருந்து அந்தப் பல்கலைக்கழக மாணவியை இழுத்து சரிவில் இருந்த ஒரு பாறையின் மீது அமர வைத்துவிட்டு, அவரை மீட்க பட்டிப்பொல பொலிஸ் அதிகாரிகள், இராணுவம் மற்றும் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினரின் உதவியைக் நாடினார். அதன்படி, நுவரெலியாவில் உள்ள இலங்கை 3 ஆவது சிங்கப் படைப்பிரிவைச் சேர்ந்த இராணுவ வீரர்கள், நுவரெலியா பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள், வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பட்டிப்பொல பொலிஸ் நிலைய அதிகாரிகள் ஆகியோர் இணைந்து நடத்திய ஒரு கூட்டு நடவடிக்கைக்குப் பின்னர் ஹோட்டன் சமவெளியில் கீழ் சரிவில் இருந்த ஒரு பாறையில் இருந்த பல்கலைக்கழக மாணவியை பாதுகாப்பாக மீட்டு, சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கைகள் எடுத்ததாக ஹோட்டன் சமவெளி தேசிய வனப் பூங்காவின் முகாமையாளர் மஞ்சுளா மொனரதென்ன தெரிவித்தார்.

TAGGED:accidentmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கிளிநொச்சி தர்மபுரம் விபத்து – இரண்டு இளைஞர்கள் பலி

கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

இலங்கையில் அனைத்து முச்சக்கரவண்டிகளும் செயலி அடிப்படையில் இயங்க வேண்டும்: தேசிய போக்குவரத்து ஆணையம்
உள்நாடு

இலங்கையில் அனைத்து முச்சக்கரவண்டிகளும் செயலி அடிப்படையில் இயங்க வேண்டும்: தேசிய போக்குவரத்து ஆணையம்

By news team
முல்லைத்தீவு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி – 28 முதல் நெல் கொள்வனவு ஆரம்பம்
உள்நாடு

முல்லைத்தீவு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி – 28 முதல் நெல் கொள்வனவு ஆரம்பம்

By news team
டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் யுவதியின் சடலம் மீது மூவர் பாலியல் துஷ்பிரயோகம்
உள்நாடு

டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் யுவதியின் சடலம் மீது மூவர் பாலியல் துஷ்பிரயோகம்

By news team
சிறையில் இருக்கும் இம்ரான் கான் உடல்நிலை மோசம் – புதிய சிறைக்கு மாற்ற பாகிஸ்தான் அரசு முடிவு
உலகம்

சிறையில் இருக்கும் இம்ரான் கான் உடல்நிலை மோசம் – புதிய சிறைக்கு மாற்ற பாகிஸ்தான் அரசு முடிவு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?