By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, May 30, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

சுகாதார ஊழியர்களுக்கு விடுமுறை கொடுப்பனவு மற்றும் தனி எரிபொருள் ஒதுக்கீடு அவசியம்

news team
Last updated: March 18, 2026 7:25 am
By news team
Share
1 Min Read
சுகாதார ஊழியர்களுக்கு விடுமுறை கொடுப்பனவு மற்றும் தனி எரிபொருள் ஒதுக்கீடு அவசியம்
SHARE

சுகாதாரத்துறையை அத்தியாவசிய சேவையாகக் கருதுவதானால், அதனை வழங்கும் ஊழியர்களுக்கும் முறையான சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என சுகாதார சேவை தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.அரசாங்கத்தின் அண்மைக்கால நடவடிக்கைகள் குறித்து கவலை வெளியிட்டுள்ள அவர், சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.இதன்படி புதன்கிழமை போன்ற பொது விடுமுறை நாட்களில் சுகாதார ஊழியர்கள் பணிக்கு அழைக்கப்படும் போது, அவர்களுக்குரிய விடுமுறை கொடுப்பனவு முறையாக வழங்கப்பட வேண்டும் என அவர் கோரியுள்ளார்.மேலும் ஏனைய தனியார் வாகனங்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு வழங்கப்படும் அதே அளவிலான எரிபொருள் ஒதுக்கீட்டை சுகாதார ஊழியர்களுக்கும் வழங்குவது முறையற்றது.தடையில்லா சேவையை உறுதிப்படுத்த சுகாதாரத் துறைக்கு என பிரத்தியேக எரிபொருள் ஒதுக்கீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.அத்துடன் ஏனைய துறைகளுக்கு விடுமுறை அளித்துவிட்டு, சுகாதாரத் துறையினரை மட்டும் வழமை போல் பணியாற்றுமாறு கோருவது முரணானது.மேலும் நோயாளர்களுக்கு விடுமுறை நாட்களில் சிகிச்சை தேவைப்படாது என அதிகாரிகள் கருதுகிறார்களா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.இந்தநிலையில் காவல்துறையினரின் ஒத்துழைப்பு மற்றும் உரிய அதிகாரிகளின் தலையீட்டுடன் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கான வசதியான நடைமுறை உருவாக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.கூடுதல் பலன்கள் இன்றி ஊழியர்களை விடுமுறை நாட்களில் பணியாற்ற வைத்தால், அதன் விளைவுகளுக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

TAGGED:muthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கோட்டாபய பதவியேற்ற ஒரே வாரத்தில் பிள்ளையானை பிணையில் எடுக்க திட்டம் வாக்குமூலம் வழங்கிய அசாத் மௌலானா

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்னும் பிள்ளையான் சிறையிலிருந்தபோது, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

ஈரானிடம் இருந்து எண்ணெய் கிடைக்காவிட்டாலும் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – ரணில் விக்ரமசிங்க விளக்கம்
உள்நாடு

ஈரானிடம் இருந்து எண்ணெய் கிடைக்காவிட்டாலும் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – ரணில் விக்ரமசிங்க விளக்கம்

By news team
அமரகீர்த்தி அத்துகோரள படுகொலை: 12 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனைக்கு மன்னிப்பு வழங்குமாறு கோரிக்கை
உள்நாடு

அமரகீர்த்தி அத்துகோரள படுகொலை: 12 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனைக்கு மன்னிப்பு வழங்குமாறு கோரிக்கை

By news team
உத்தரகாண்ட் மாநில அரசு பள்ளிகளில் பகவத் கீதா வாசிக்க கட்டாயம்
இந்தியா

உத்தரகாண்ட் மாநில அரசு பள்ளிகளில் பகவத் கீதா வாசிக்க கட்டாயம்

By news team
மத்திய கிழக்கு போர் பதற்றம் மத்தியில் இலங்கைக்கு 30,000 மெட்ரிக் டன் பர்னஸ் எண்ணெய் – மின்வெட்டு இல்லை என அறிவிப்பு
உள்நாடு

மத்திய கிழக்கு போர் பதற்றம் மத்தியில் இலங்கைக்கு 30,000 மெட்ரிக் டன் பர்னஸ் எண்ணெய் – மின்வெட்டு இல்லை என அறிவிப்பு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?