By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Aug 21, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

புழுக்களுடன் பொரித்த கோழி வழங்கிய கடை உரிமையாளருக்கு 15 ஆயிரம் ரூபாய் அபராதம் – சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு

news team
Last updated: March 7, 2026 4:43 pm
By news team
Share
1 Min Read
புழுக்களுடன் பொரித்த கோழி வழங்கிய கடை உரிமையாளருக்கு 15 ஆயிரம் ரூபாய் அபராதம் – சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு
SHARE

சுகாதாரச் சீர்கேட்டுடன் உணவு வழங்கிய கடை உரிமையாளருக்கு 15 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டு சம்மாந்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டது.குறித்த வழக்கு நேற்று (06) சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டவேளை, கடை உரிமையாளரை கடந்த 13 மாதங்களுக்கு மேலாக நீடித்த சட்டப் போராட்டத்திற்குப் பின் குற்றவாளியாக இனங்கண்ட சம்மாந்துறை நீதவான் நீதிமன்று அவரது பொருளாதார நிலையை கருத்திற்கொண்டு 15 ஆயிரம் ரூபா அபராதம் விதித்து வழக்கினை முடிவிற்கு கொண்டுவந்துள்ளது.கடந்த 2025 பெப்ரவரி 2 சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட கல்லரிச்சல் பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட சங்க ஒன்றுகூடலில் வழங்கப்பட்ட இரவு விருந்தில் பொரித்த கோழியில் புழுக்கள் இருந்தமை கண்டறியப்பட்டிருந்தது.அத்துடன் சம்பவ தினமன்று கடை உரிமையாளருடன் சங்க ஒன்று கூடலில் ஈடுபட்டவர்கள் தர்க்கம் செய்த நிலையில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் குழுவினருக்கு தகவல் வழங்கி இருந்தனர்.இதற்கமைய சட்ட நடவடிக்கையை தொடர்ந்த சுகாதார தரப்பினர் கடந்த 13 மாதங்களுக்கு மேலாக நீடித்த சட்டப் போராட்டத்திற்குப் பின் குறித்த உணவு வழங்கிய நபருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.சம்பவத்தின் பின் கடையை மூடிவிட்டு தலைமறைவான வெளி ஊர் கடை உரிமையாளர் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைகளுக்கும் மூன்று முறை ஆஜராகாமல் தவிர்த்து வந்த நிலையில் இறுதியில் நீதிமன்ற பிடிவிறாந்து மூலம் அவர் ஆஜர்ப்படுத்தப்பட்டிருந்தார்.அத்துடன் தான் நிரபராதி என வாதாட முற்பட்ட போதிலும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் குழுவினரின் வலுவான சாட்சியங்கள் மற்றும் அனுபவ ரீதியிலான சட்ட வாதங்களின் அடிப்படையில் அவரால் உண்மையை மறைக்க முடியாமல் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

TAGGED:muthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மொனராகலையில் கோர விபத்து: 5 பேர் உயிரிழப்பு

மொனராகலை, கும்புக்கான பகுதியில் இன்று (21) காலை டிப்பர் லொறியும் டிராக்டரும் மோதிய விபத்தில் 5…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

பேருந்தை முந்திச் செல்ல முயன்ற கார் விபத்து – 3 வயது குழந்தை பலி
உள்நாடு

பேருந்தை முந்திச் செல்ல முயன்ற கார் விபத்து – 3 வயது குழந்தை பலி

By news team
IDH மருத்துவமனையில் உயிரிழந்த தாய் மரணம் – தரமற்ற மருந்துகளே காரணம் என கணவர் குற்றச்சாட்டு
உள்நாடு

IDH மருத்துவமனையில் உயிரிழந்த தாய் மரணம் – தரமற்ற மருந்துகளே காரணம் என கணவர் குற்றச்சாட்டு

By news team
ஈரான் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு; அதிகாரிகளுடன் சந்திப்பு ரத்து – ட்ரம்ப் அறிவிப்பு
உலகம்

ஈரான் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு; அதிகாரிகளுடன் சந்திப்பு ரத்து – ட்ரம்ப் அறிவிப்பு

By news team
இலங்கை வரலாற்றிலேயே மிகப்பெரிய லாட்டரி பரிசு: ரூ. 62.9 கோடி வென்ற அதிர்ஷ்டசாலிக்கு இன்று காசோலை வழங்கி வைப்பு
உள்நாடு

இலங்கை வரலாற்றிலேயே மிகப்பெரிய லாட்டரி பரிசு: ரூ. 62.9 கோடி வென்ற அதிர்ஷ்டசாலிக்கு இன்று காசோலை வழங்கி வைப்பு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?