By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Aug 21, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உலகம்

அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கோரிய ஈரான் ஜனாதிபதி– பிராந்திய தாக்குதல்கள் நிறுத்தப்படும் என ஈரான் அறிவிப்பு

news team
Last updated: March 7, 2026 2:27 pm
By news team
Share
1 Min Read
அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கோரிய ஈரான் ஜனாதிபதி– பிராந்திய தாக்குதல்கள் நிறுத்தப்படும் என ஈரான் அறிவிப்பு
SHARE

நிபந்தனையற்ற சரணடைவுக்கான அமெரிக்காவின் கோரிக்கை, “அவர்கள் தங்களது கல்லறைக்கே கொண்டு செல்ல வேண்டிய ஒரு கனவு” என்று ஈரான் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.ஈரானிய அரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட உரையில் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் இந்த அறிக்கையை வெளியிட்டார்.அதேவேளை, பிராந்திய நாடுகள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களுக்காக அவர் மன்னிப்பு கோரியதுடன், தெஹ்ரான் அத்தாக்குதல்களை நிறுத்தும் என்றும் உறுதியளித்தார்.இத்தாக்குதல்கள் படைகளுக்கு இடையிலான தொடர்பாடல் குறைபாடுகளால் ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகியவை ஈரானை இலக்கு வைத்து வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து முன்னெடுத்து வரும் நிலையில், இன்று (07) காலை வளைகுடா அரபு நாடுகள் மீது ஈரான் தீவிரத் தாக்குதல்களை நடத்திய போதே இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளன.பஹ்ரைன், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் ஆகிய நாடுகளின் மீது இன்று காலை மீண்டும் மீண்டும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.துபாயில் சனிக்கிழமை காலை பல வெடிப்புச் சத்தங்கள் கேட்டதுடன், தமது வான் பாதுகாப்பு கட்டமைப்புகள் செயற்படுத்தப்பட்டதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

TAGGED:IranIran-Israel Warmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மொனராகலையில் கோர விபத்து: 5 பேர் உயிரிழப்பு

மொனராகலை, கும்புக்கான பகுதியில் இன்று (21) காலை டிப்பர் லொறியும் டிராக்டரும் மோதிய விபத்தில் 5…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

மஸ்கெலியாவில் டிப்பர் லொறி 150 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து
உள்நாடு

மஸ்கெலியாவில் டிப்பர் லொறி 150 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து

By news team
290 வகை உணவுகளைச் சமைத்து மருமகனை பிரமிக்க வைத்த மாமியார்
இந்தியா

290 வகை உணவுகளைச் சமைத்து மருமகனை பிரமிக்க வைத்த மாமியார்

By news team
ரூ.6 இலட்சம் பெறுமதியான அலங்கார மலர்ச் செடிகளுடன் இலங்கை பயணி கைது
உள்நாடு

ரூ.6 இலட்சம் பெறுமதியான அலங்கார மலர்ச் செடிகளுடன் இலங்கை பயணி கைது

By news team
கிரிந்த போதைப்பொருள் வழக்கு: தகவல் தருநரை கொலை செய்ய ஒப்பந்தம் – வாடகை கொலையாளி கைது
உள்நாடு

கிரிந்த போதைப்பொருள் வழக்கு: தகவல் தருநரை கொலை செய்ய ஒப்பந்தம் – வாடகை கொலையாளி கைது

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?