By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Aug 21, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

வென்னப்புவ சர்வதேச பாடசாலையில் மாணவிகளின் குடிநீர் போத்தல்களில் மர்மமான முறையில் கலந்த குளிசைகள்

news team
Last updated: March 5, 2026 2:24 pm
By news team
Share
1 Min Read
வென்னப்புவ சர்வதேச பாடசாலையில் மாணவிகளின் குடிநீர் போத்தல்களில் மர்மமான முறையில் கலந்த குளிசைகள்
SHARE

வென்னப்புவ பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவிகளின் குடிநீர் போத்தல்களில் மர்மமான முறையில் குளிசைகள் கலவை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.குறித்த பாடசாலையில் 8 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மூன்று மாணவிகள், காலைக் கூட்டத்தை முடித்துவிட்டு வகுப்பறைக்குத் திரும்பியுள்ளனர். இதன்போது ஒரு மாணவியின் தண்ணீர் போத்தலை அவதானித்தபோது, அதற்குள் ஏதோ ஒரு மாத்திரை கரைந்து நுரை பொங்கிய நிலையில் இருந்துள்ளது.இதனால் அச்சமடைந்த மாணவிகள், போத்தலில் இருந்த நீரைத் தவிர்த்துவிட்டு, மற்றுமொரு மாணவியின் தண்ணீர் போத்தலில் இருந்த நீரைப் பகிர்ந்து அருந்தியுள்ளனர். தண்ணீரை அருந்தியபோது அதில் அதிக கசப்புத் தன்மை இருப்பதை மாணவிகள் உணர்ந்துள்ளனர்.உடனடியாக அந்தப் தண்ணீர் போத்தலை சோதித்துப் பார்த்தபோது, அதனுள்ளும் மூன்று மாத்திரைகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து உடனடியாக தமது ஆசிரியையிடம் மாணவிகள் முறையிட்டுள்ளனர்.பாதிக்கப்பட்ட மூன்று மாணவிகளையும் பாடசாலை அதிபர் உடனடியாக வென்னப்புவ பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றிற்கு அழைத்துச் சென்று பரிசோதனைக்கு உட்படுத்தினார்.அங்கு மாணவிகளுக்கு பாரிய உடல்நலப் பாதிப்புகள் ஏதுமில்லை என வைத்தியர்கள் உறுதிப்படுத்தியதையடுத்து, மாணவிகள் மீண்டும் பாடசாலைக்கு அழைத்து வரப்பட்டனர். எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவிகள் மூவரும் பின்னர் மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் மாணவிகளின் தண்ணீர் போத்தல்களில் குளிசைகளை கலவை செய்தது யார்? அதன் பின்னணி என்ன? என்பது குறித்து வென்னப்புவ பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

TAGGED:drugmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மொனராகலையில் கோர விபத்து: 5 பேர் உயிரிழப்பு

மொனராகலை, கும்புக்கான பகுதியில் இன்று (21) காலை டிப்பர் லொறியும் டிராக்டரும் மோதிய விபத்தில் 5…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

6ஆம் தர கல்விச் சீர்திருத்தங்கள் 2027க்கு ஒத்திவைப்பு – அமைச்சரவை முடிவு
உள்நாடு

6ஆம் தர கல்விச் சீர்திருத்தங்கள் 2027க்கு ஒத்திவைப்பு – அமைச்சரவை முடிவு

By news team
எம்.பிக்களின் ஓய்வூதியங்கள் இரத்து சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணல்ல – உயர் நீதிமன்றம் ஒப்புதல்
உள்நாடு

எம்.பிக்களின் ஓய்வூதியங்கள் இரத்து சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணல்ல – உயர் நீதிமன்றம் ஒப்புதல்

By news team
கொழும்பில் கைது செய்யப்பட்ட நபருக்கு போதைப்பொருள் வழங்க முயன்ற காதலி கைது
உள்நாடு

கொழும்பில் கைது செய்யப்பட்ட நபருக்கு போதைப்பொருள் வழங்க முயன்ற காதலி கைது

By news team
அரசாங்க ஊழல்களை வெளிப்படுத்தியதால் நெருக்கடிக்கு உள்ளாகிறேன் – கம்மன்பில குற்றச்சாட்டு
உள்நாடு

அரசாங்க ஊழல்களை வெளிப்படுத்தியதால் நெருக்கடிக்கு உள்ளாகிறேன் – கம்மன்பில குற்றச்சாட்டு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?