By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Oct 10, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

மீட்கப்பட்ட ஈரானிய மாலுமிகளை ஈரானுக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் – அமெரிக்கா இலங்கைக்கு அழுத்தம்

news team
Last updated: March 7, 2026 1:06 pm
By news team
Share
1 Min Read
மீட்கப்பட்ட ஈரானிய மாலுமிகளை ஈரானுக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் – அமெரிக்கா இலங்கைக்கு அழுத்தம்
SHARE

ஈரானிய கப்பலில் இருந்து மீட்கப்பட்டு இலங்கையில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈரானிய மாலுமிகளை ஈரானுக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா, அழுத்தத்தை கொடுத்து வருவதாக, ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த புதன்கிழமை, காலியில் இருந்து சுமார் 19 கடல் மைல் தொலைவில், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று ஈரானின் ‘IRIS Dena’ போர்க்கப்பலைத் தாக்கி மூழ்கடித்ததில் 87 பேர் உயிரிழந்தனர்.இதனையடுத்து, இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்தில் சிக்கியிருந்த ஈரானிய கடற்படை துணைக்கப்பலான ‘Booshehr’-ல் இருந்த 208 மாலுமிகளை இலங்கை கடற்படை பாதுகாப்பாக மீட்டது.இந்த நிலையில்,கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பொறுப்பாளர் ஜேன் ஹொவெல், இலங்கை அரசாங்கத்திடம் இந்த மாலுமிகளை ஈரானுக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார்.அவர்களை ஈரானுக்கு அனுப்பினால், அவர்கள் ஈரானின் பிரசாரங்களுக்குப் பயன்படுத்தப்படலாம் என்பதால், அவ்வாறு செய்வதைத் தவிர்க்குமாறு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.இதேவேளை, இந்தியாவில் உள்ள இஸ்ரேலியத் தூதருடனான கலந்துரையாடலின் போது, கொழும்பில் தங்க வைக்கப்படுள்ள மாலுமிகளை ஈரானுக்கு அனுப்பும் திட்டம் இல்லை என்றும், அவர்களை மாற்று திட்டம் ஒன்றுக்கு ஊக்குவிப்பது குறித்து ஏதேனும் பேச்சுவார்த்தைகள் உள்ளதா என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாகவும் அந்த ஆவணங்கள் தெரிவிப்பதாக, ரொயட்டர்ஸ் கூறியுள்ளது.எனினும் இந்த தகவல் குறித்து இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

TAGGED:Iranmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பாணந்துறையில் தொழிலதிபர் கடத்தல் – மனைவி காயம்

பாணந்துறை மஹாநாம வீதிக்கு அருகிலுள்ள வீதியொன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பிரபல வர்த்தகர் ஒருவர் அடையாளம்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்கவின் பெயரைப் பயன்படுத்தி பண மோசடி – பொது எச்சரிக்கை
உள்நாடு

பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்கவின் பெயரைப் பயன்படுத்தி பண மோசடி – பொது எச்சரிக்கை

By news team
பிட்டபெத்தர பகுதியில் இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் ஊற்று கண்டுபிடிப்பு – நிமிடத்திற்கு 10,000 லீற்றர்
உள்நாடு

பிட்டபெத்தர பகுதியில் இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் ஊற்று கண்டுபிடிப்பு – நிமிடத்திற்கு 10,000 லீற்றர்

By news team
பொகவந்தலாவை காசல்ரி தோட்டத்தில் ஜனவரி மாத சம்பளம் 1,750 ரூபா நாள் சம்பளம் – மக்கள் மகிழ்ச்சி
உள்நாடு

பொகவந்தலாவை காசல்ரி தோட்டத்தில் ஜனவரி மாத சம்பளம் 1,750 ரூபா நாள் சம்பளம் – மக்கள் மகிழ்ச்சி

By news team
அனுமதியின்றி பெற்றோல் வைத்த நபருக்கு சிறைத் தண்டனை – கல்கிசை நீதிமன்ற தீர்ப்பு
உள்நாடு

அனுமதியின்றி பெற்றோல் வைத்த நபருக்கு சிறைத் தண்டனை – கல்கிசை நீதிமன்ற தீர்ப்பு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?