By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, May 30, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

காலி கஹதுடுவ ஆடைத் தொழிற்சாலையில் இளம் பெண் கொலை – சக ஊழியர் தலைமறைவு; பொலிஸ் விசாரணை தீவிரம்

news team
Last updated: March 5, 2026 8:34 am
By news team
Share
1 Min Read
காலி கஹதுடுவ ஆடைத் தொழிற்சாலையில் இளம் பெண் கொலை – சக ஊழியர் தலைமறைவு; பொலிஸ் விசாரணை தீவிரம்
SHARE

தென்னிலங்கையில் இளம் பெண் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.காலி, கஹதுடுவ பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில், பணிபுரிந்த மேற்பார்வையாளரான பெண்ணை சக ஊழியர் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வயதான கிம்ஹானி பெரேரா என்ற இளம் பெண்ணே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.புலத்சிங்கள பகுதியைச் சேர்ந்த இவர், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இந்த ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளார்.தாக்குதலை நடத்தியவர் அதே தொழிற்சாலையில் உதவியாளராகப் பணிபுரிந்த பதுளை பகுதியைச் சேர்ந்த திருமணமான நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் இரத்தக் கறையுடன் கூடிய கத்தி ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.உயிரிழந்த பெண்ணுக்கும் சந்தேக நபருக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகத் காதல் தொடர்பு இருந்து வந்துள்ளது.எனினும் கடந்த சில நாட்களாக அந்தப் பெண் சந்தேக நபருடன் பேசுவதைத் தவிர்த்து வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.நேற்று காலை பணிக்குச் சென்ற அந்தப் பெண், தனது கைப்பையை வைப்பதற்காக ஒதுக்கப்பட்ட இடத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, அங்கு மறைந்திருந்த சந்தேக நபர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.அப்போது ஆத்திரமடைந்த சந்தேக நபர், மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்தப் பெண்ணின் கழுத்தை அறுத்துள்ளார்.தாக்குதலுக்குப் பிறகு அங்கிருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர், தான் தங்கியிருந்த அறைக்குச் சென்று தனது உடைகளை எடுத்துக்கொண்டு தலைமறைவாகியுள்ளார்.படுகாயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.சந்தேக நபரை கைது செய்வதற்காக கஹதுடுவ பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

TAGGED:crimedeathmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கோட்டாபய பதவியேற்ற ஒரே வாரத்தில் பிள்ளையானை பிணையில் எடுக்க திட்டம் வாக்குமூலம் வழங்கிய அசாத் மௌலானா

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்னும் பிள்ளையான் சிறையிலிருந்தபோது, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

மே மாதம் நடுப்பகுதி வரை எரிபொருள் கையிருப்பு – பெற்றோலியக் கூட்டுத்தாபனம்
உள்நாடு

மே மாதம் நடுப்பகுதி வரை எரிபொருள் கையிருப்பு – பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

By news team
ஈரான் நோக்கி அமெரிக்க போர்க்கப்பல்கள் – ஹவுதி தாக்குதல் மிரட்டல்
உலகம்

ஈரான் நோக்கி அமெரிக்க போர்க்கப்பல்கள் – ஹவுதி தாக்குதல் மிரட்டல்

By news team
போலித் தங்க ஆபரண விற்பனை: நான்கு பெண்கள் உட்பட ஐந்து பேர் கைது
உள்நாடு

போலித் தங்க ஆபரண விற்பனை: நான்கு பெண்கள் உட்பட ஐந்து பேர் கைது

By news team
முல்லைத்தீவு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி – 28 முதல் நெல் கொள்வனவு ஆரம்பம்
உள்நாடு

முல்லைத்தீவு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி – 28 முதல் நெல் கொள்வனவு ஆரம்பம்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?