By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Oct 10, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் 15 பேரின் சொத்துகளை அரசுடைமையாக்க உத்தரவு

news team
Last updated: September 23, 2026 6:02 am
By news team
Share
1 Min Read
ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் 15 பேரின் சொத்துகளை அரசுடைமையாக்க உத்தரவு
SHARE

2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான பிரதான வழக்கில் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்ட 15 பேருக்கும் சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அரசுடைமையாக்க கொழும்பு நிரந்தர உயர் நீதிமன்ற Trial-at-Bar உத்தரவிட்டுள்ளது.மூவரடங்கிய நீதிபதிகள் குழுவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன், 15 பேருக்கும் கடுமையான சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.நீதிமன்றத் தீர்ப்பின்படி, ஐந்து குற்றவாளிகளுக்கு தலா 200 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும், மேலும் ஐந்து பேருக்கு தலா 220 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளன.மேலும் நான்கு பேருக்கு தலா 240 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், மற்றொரு குற்றவாளிக்கு 260 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை நடத்த சதி செய்தல், தாக்குதல்களுக்கு உதவுதல் மற்றும் உடந்தையாக செயற்பட்டமை, தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் இந்த வழக்கில் முன்வைக்கப்பட்டிருந்தன.2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இலங்கையின் பல பகுதிகளில் தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களை இலக்கு வைத்து தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்தத் தாக்குதல்களில் 260க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான பிரதான வழக்கில் 24 பேருக்கு எதிராக மொத்தம் 23,270 குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. கொலை, கொலை முயற்சி, பயங்கரவாதச் சதி, தாக்குதல்களுக்கு உதவுதல் மற்றும் துப்பாக்கிகள், வெடிபொருட்கள் உள்ளிட்டவற்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளும் இதில் அடங்குகின்றன.நீதிமன்ற விசாரணையின் முடிவில் 24 பேரில் 15 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டதுடன், ஏனைய ஒன்பது பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.இந்த நீண்டகால வழக்கின் தீர்ப்பு 2026 செப்டம்பர் 22ஆம் திகதி வழங்கப்பட்டது. மூவரடங்கிய நீதிபதிகள் குழுவில் நவரத்ன மாரசிங்க, ராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஷங்க ஆகிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் இடம்பெற்றிருந்தனர்.

TAGGED:EasterSundayAttacksmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பாணந்துறையில் தொழிலதிபர் கடத்தல் – மனைவி காயம்

பாணந்துறை மஹாநாம வீதிக்கு அருகிலுள்ள வீதியொன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பிரபல வர்த்தகர் ஒருவர் அடையாளம்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

இறந்துவிட்டதாக பொலிஸார் அறிவித்த நபர் இறுதிச்சடங்கு வீட்டிற்கு உயிருடன் வந்த சம்பவம்!
உள்நாடு

இறந்துவிட்டதாக பொலிஸார் அறிவித்த நபர் இறுதிச்சடங்கு வீட்டிற்கு உயிருடன் வந்த சம்பவம்!

By news team
காதலரை திருமணம் செய்த மகள் “இறந்ததாக” அறிவிப்பு – உருவ பொம்மைக்கு இறுதிச்சடங்கு நடத்திய குடும்பம்
இந்தியா

காதலரை திருமணம் செய்த மகள் “இறந்ததாக” அறிவிப்பு – உருவ பொம்மைக்கு இறுதிச்சடங்கு நடத்திய குடும்பம்

By news team
நீண்ட காலக் கட்டுப்பாடு நீக்கம் – Gmail மின்னஞ்சல் பெயரை மாற்றும் வசதி அறிமுகம்
தொழில்நுட்பம்

நீண்ட காலக் கட்டுப்பாடு நீக்கம் – Gmail மின்னஞ்சல் பெயரை மாற்றும் வசதி அறிமுகம்

By news team
விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு இடமில்லை – அமைச்சர் ஆனந்த விஜேபால
உள்நாடு

விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு இடமில்லை – அமைச்சர் ஆனந்த விஜேபால

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?