By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Oct 10, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

நாட்டில் போதிய எரிபொருள் கையிருப்பு QR முறையை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை- இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

news team
Last updated: March 2, 2026 1:53 pm
By news team
Share
1 Min Read
நாட்டில் போதிய எரிபொருள் கையிருப்பு QR முறையை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை- இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்
SHARE

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் சந்தர்ப்பத்திலேயே QR முறையைப் பயன்படுத்தி எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டும் எனவும், தற்போது நாட்டில் போதியளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதால் QR முறையைப் பயன்படுத்த வேண்டிய எவ்வித அவசியமும் இல்லை எனவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும், சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை ஏதேனும் ஏற்பட்டால், அவ்வாறான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் QR முறையைப் பயன்படுத்தத் தயாராக இருப்பதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.இன்றைய தினமும் (02) வழமை போன்று எரிபொருள் விநியோகப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாகவும், காலை 9.45 மணி வரை 29 இலட்சத்து 25 ஆயிரத்து 349 லீற்றர் டீசலும், 29 இலட்சத்து 4 ஆயிரம் லீற்றர் ஒக்டேன் 92 ரக பெற்றோலும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக டி.ஜே. ராஜகருணா தெரிவித்தார்.மேலும், நேற்றையதினம் (01) மாத்திரம் 30 இலட்சத்து 81 ஆயிரத்து 349 லீற்றர் டீசலும், 39 இலட்சத்து 20 ஆயிரத்து 400 லீற்றர் ஒக்டேன் 92 ரக பெற்றோலும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.இதற்கிடையில், தொடர்ச்சியாக எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதற்கான போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதால் மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.மக்கள் இவ்வாறு அநாவசியமாகப் பதற்றமடைந்து தொடர்ச்சியாக வரிசைகளில் காத்திருப்பது வருத்தமளிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.அத்துடன், அனுமதிப்பத்திரமின்றி வீடுகளில் எரிபொருளைப் பதுக்கி வைப்பது சட்டவிரோதமானதும் ஆபத்தானதுமான செயலாகும் எனவும், அது தொடர்பில் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் டி.ஜே. ராஜகருணா இதன்போது தெரிவித்தார்.இது தொடர்பில் நேற்றையதினமும் (01) பொலிஸாரால் சிலர் கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.இவ்வாறு எரிபொருளைப் பதுக்கி வைப்பவர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தால், அது குறித்துப் பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

TAGGED:muthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பாணந்துறையில் தொழிலதிபர் கடத்தல் – மனைவி காயம்

பாணந்துறை மஹாநாம வீதிக்கு அருகிலுள்ள வீதியொன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பிரபல வர்த்தகர் ஒருவர் அடையாளம்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

ஆடைத் தொழிற்சாலை களஞ்சியசாலையில் தீப்பரவல்; 22 பேர் வைத்தியசாலையில் அனுமதி
உள்நாடு

ஆடைத் தொழிற்சாலை களஞ்சியசாலையில் தீப்பரவல்; 22 பேர் வைத்தியசாலையில் அனுமதி

By news team
QR பதிவு சிக்கல்களுக்கு WhatsApp உதவி சேவை- டிஜிட்டல் பொருளாதார அமைச்சு
உள்நாடு

QR பதிவு சிக்கல்களுக்கு WhatsApp உதவி சேவை- டிஜிட்டல் பொருளாதார அமைச்சு

By news team
இலங்கை வரலாற்றிலேயே மிகப்பெரிய லாட்டரி பரிசு: ரூ. 62.9 கோடி வென்ற அதிர்ஷ்டசாலிக்கு இன்று காசோலை வழங்கி வைப்பு
உள்நாடு

இலங்கை வரலாற்றிலேயே மிகப்பெரிய லாட்டரி பரிசு: ரூ. 62.9 கோடி வென்ற அதிர்ஷ்டசாலிக்கு இன்று காசோலை வழங்கி வைப்பு

By news team
செம்மணி புதைகுழியில் காசு வடிவ தாயத்துடன் மனித என்புக்கூடு மீட்பு; அகழ்வில் புதிய தடயங்கள் கண்டுபிடிப்பு
உள்நாடு

செம்மணி புதைகுழியில் காசு வடிவ தாயத்துடன் மனித என்புக்கூடு மீட்பு; அகழ்வில் புதிய தடயங்கள் கண்டுபிடிப்பு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?