By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, May 30, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இணைய வழி நிதி மோசடி முயற்சி: 9 சீனப் பிரஜைகள் 2.4 கோடி ரூபா பெறுமதியான சாதனங்களுடன் கைது

news team
Last updated: April 16, 2026 11:14 am
By news team
Share
1 Min Read
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இணைய வழி நிதி மோசடி முயற்சி: 9 சீனப் பிரஜைகள் 2.4 கோடி ரூபா பெறுமதியான சாதனங்களுடன் கைது
SHARE

இலங்கையில் இணைய வழி நிதி மோசடிகளை முன்னெடுப்பதற்காக வருகை தந்த 09 சீனப் பிரஜைகள், சுமார் 2 கோடியே 40 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியான இலத்திரனியல் தொடர்பாடல் சாதனங்களுடன் இன்று வியாழக்கிழமை (16) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட சீனப் பிரஜைகள் இன்று அதிகாலை சைனா ஈஸ்டர்ன் விமான சேவையின் MU-6912, எயார் சீனாவின் CA-425 மற்றும் எயார் ஏசியாவின் FD-047 ஆகிய விமானங்கள் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனையின் போது, அவர்கள் தங்களது உடலிலும் ஆடைகளுக்குள்ளும் செலோடெப் மூலம் ஒட்டி மறைத்து வைத்திருந்த 383 பயன்படுத்தப்பட்ட கைத்தொலைபேசிகள், 101 டெப் கணினிகள் மற்றும் 06 வைஃபை ரவுட்டர்கள் என்பன கண்டுபிடிக்கப்பட்டன.கைது செய்யப்பட்ட சீனப் பிரஜைகளைத் தடுப்புக் காவலில் வைத்துள்ள கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

TAGGED:arrestmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கோட்டாபய பதவியேற்ற ஒரே வாரத்தில் பிள்ளையானை பிணையில் எடுக்க திட்டம் வாக்குமூலம் வழங்கிய அசாத் மௌலானா

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்னும் பிள்ளையான் சிறையிலிருந்தபோது, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

ஜனநாயகனோடு மோதும் பராசக்தி - புது ரிலீஸ் தேதி அறிவிப்பு
சினிமா

ஜனநாயகனோடு மோதும் பராசக்தி – புது ரிலீஸ் தேதி அறிவிப்பு

By news team
அரசாங்க ஊழல்களை வெளிப்படுத்தியதால் நெருக்கடிக்கு உள்ளாகிறேன் – கம்மன்பில குற்றச்சாட்டு
உள்நாடு

அரசாங்க ஊழல்களை வெளிப்படுத்தியதால் நெருக்கடிக்கு உள்ளாகிறேன் – கம்மன்பில குற்றச்சாட்டு

By news team
டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் யுவதியின் சடலம் மீது மூவர் பாலியல் துஷ்பிரயோகம்
உள்நாடு

டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் யுவதியின் சடலம் மீது மூவர் பாலியல் துஷ்பிரயோகம்

By news team
ஈரானின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு தகுந்த பதிலடி – வளைகுடா நாடுகள் அறிவிப்பு
உலகம்

ஈரானின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு தகுந்த பதிலடி – வளைகுடா நாடுகள் அறிவிப்பு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?