By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Apr 4, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

மகளின் நினைவாக 4.5 ஏக்கர் காணி தானம் – எம்பிலிபிட்டிய தந்தையின் நெகிழ்ச்சி செயல்

news team
Last updated: February 28, 2026 2:36 pm
By news team
Share
1 Min Read
மகளின் நினைவாக 4.5 ஏக்கர் காணி தானம் – எம்பிலிபிட்டிய தந்தையின் நெகிழ்ச்சி செயல்
SHARE

எம்பிலிபிட்டியவில் , தனது 16 வயது மகளின் நினைவாக ஒரு தந்தை பல ஏக்கர் காணிகளை தானமாக வழங்கி வரும் நெகிழ்ச்சியான சம்பவம் இடம்பெற்றுள்ளது.எம்பிலிபிட்டிய, கச்சிகல பகுதியைச் சேர்ந்த டபிள்யூ.ஏ. கல்யாணசிறி (W.A. Kalyanasiri) என்பவரின் 16 வயது மகள் லக்சுமி தீபிகா, கடந்த 2024 ஆம் ஆண்டு கடுமையான சுகயீனம் காரணமாக உயிரிழந்தார்.இந்நிலையில் தனது மகளின் நினைவாக , இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் காணியற்ற ஏழைக் குடும்பங்களுக்காக இந்த கிராமத்திற்கு ‘லக்சுமி பூமி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.கடந்த காலங்களில் நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை, தஹராவ போன்ற பிரதேசங்கள் மண்சரிவு மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டபோது, அங்கு நிவாரணப் பொருட்களைக் கொண்டு சென்ற கல்யாணசிறி அங்குள்ள மக்களிடம் ஒரு பகிரங்க அழைப்பை விடுத்தார்.இயற்கை அனர்த்த அபாயம் இல்லாத எம்பிலிபிட்டிய பகுதியில் காணி வழங்கத் தயாராக இருக்கிறேன், விருப்பமுள்ளவர்கள் வந்து குடியேறலாம்” என அவர் விடுத்த அழைப்பையேற்று பல குடும்பங்கள் தற்போது அங்கு குடியேறி வருகின்றதாக கூறப்படுகின்றது.இதுவரை 4.5 ஏக்கர் காணி 47 நபர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் தலா சில பேர்ச் காணிகள் வீதம் வழங்கப்பட்டுள்ளன. காணி மட்டுமன்றி, விளையாட்டு மைதானம், மூலிகைத் தோட்டம் மற்றும் பொது மண்டபம் போன்ற வசதிகளுக்காகவும் காணியில் ஒரு பகுதியை அவர் ஒதுக்கியுள்ளார்.குடியேறியுள்ள மக்களுக்குத் தேவையான நீர் வசதியையும் அவரே ஏற்படுத்திக் கொடுத்துள்ளதுடன், .தற்போது குடியேறியுள்ள மக்கள் வீடுகளை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பில் காணி தானம் வழங்கியவர் கூறுகையில்,இயற்கை அனர்த்தங்களால் காணியை இழந்தவர்கள் இன்னும் வருவார்களானால், இதற்கு அருகிலுள்ள மேலும் 4.5 ஏக்கர் காணியையும் வழங்க நான் தயாராக இருக்கிறேன் எனத் தெரிவித்தார்.இந்தக் கிராமத்திற்கு அருகாமையில் இரண்டு மின்சார விநியோக மார்க்கங்கள் காணப்படுகின்றன. எனவே, இந்தக் கிராமத்திற்கு மின்சார வசதியைப் பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி, பிரதமர் அல்லது மின்சக்தி அமைச்சர் தலையிட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்

TAGGED:muthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

நாடளாவிய விசேட சோதனை நடவடிக்கை – 512 பேர் கைது

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்காக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவப் பீட வரலாற்றில் சாதனை – 8 தங்கப் பதக்கங்கள் வென்ற அபிராமி நற்குணம்
உள்நாடு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவப் பீட வரலாற்றில் சாதனை – 8 தங்கப் பதக்கங்கள் வென்ற அபிராமி நற்குணம்

By news team
ஐரோப்பாவில் கிட்கேட் லாரி கடத்தல் – 4 இலட்சம் சொக்லேட்கள் மாயம்
உலகம்

ஐரோப்பாவில் கிட்கேட் லாரி கடத்தல் – 4 இலட்சம் சொக்லேட்கள் மாயம்

By news team
நிபா வைரஸ் குறித்து இலங்கையில் எவ்வித அச்சுறுத்தலும் இல்லை – சுகாதார அமைச்சு
உள்நாடு

நிபா வைரஸ் குறித்து இலங்கையில் எவ்வித அச்சுறுத்தலும் இல்லை – சுகாதார அமைச்சு

By news team
இலங்கையில் இணைய நிதி மோசடி – 147 வெளிநாட்டு பிரஜைகள் கைது
உள்நாடு

இலங்கையில் இணைய நிதி மோசடி – 147 வெளிநாட்டு பிரஜைகள் கைது

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?