By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, May 30, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

பேருந்துகளில் பயணிக்கும் போது மிகுந்த அவதானம் அவசியம் – மயக்க மருந்து கலந்த பிஸ்கட் கொடுத்து கொள்ளையடிக்கும் கும்பல்

news team
Last updated: April 10, 2026 8:53 am
By news team
Share
1 Min Read
பேருந்துகளில் பயணிக்கும் போது மிகுந்த அவதானம் அவசியம் – மயக்க மருந்து கலந்த பிஸ்கட் கொடுத்து கொள்ளையடிக்கும் கும்பல்
SHARE

யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு நகரங்களிலிருந்து மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களுக்குப் பேருந்துகளில் தனியாகப் பயணிக்கும் பிரயாணிகளை இலக்கு வைத்து, மயக்க மருந்து கலந்த பிஸ்கட் கொடுத்து கொள்ளையடிக்கும் கும்பல் ஒன்று செயல்பட்டு வருவதாகப் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.இது குறித்து கிழக்கு மாகாணப் பெரும் குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்கள் வருமாறு:

கொள்ளையர்கள் சாதாரண பயணிகள் போல வேடமிட்டு, பேருந்துகளில் தனியாகப் பயணிக்கும் நபர்களிடம் சென்று பேச்சுக்கொடுத்து நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்கின்றனர்.பேச்சுவார்த்தையின் இடையே, தங்களின் பையிலிருந்து பிஸ்கட் பாக்கெட்டுகளை எடுத்து பயணிகளுக்குக் கொடுத்துச் சாப்பிட வற்புறுத்துகின்றனர். அந்த பிஸ்கட்டுகளில் வீரியமிக்க மயக்க மருந்து கலக்கப்பட்டிருக்கும்.பிஸ்கட் சாப்பிட்ட சிறிது நேரத்தில் பயணிகள் ஆழ்ந்த மயக்க நிலைக்குச் செல்கின்றனர். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தும் கொள்ளையர்கள், அவர்கள் அணிந்திருக்கும் தங்க ஆபரணங்கள் (சங்கிலி, மோதிரம், காப்பு) மற்றும் கைப்பையில் உள்ள பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு, பேருந்திலிருந்து தப்பிச் சென்றுவிடுகின்றனர்.மயக்க மருந்து கொடுக்கப்பட்ட பயணிகள் சுமார் 3 நாட்களுக்குப் பின்னரே சுயநினைவுக்கு வருவதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.மயக்கமடைந்தவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நிலைமை தொடர்கிறது. அண்மைக்காலமாக இவ்வாறான பல முறைப்பாடுகள் பொலிஸ் நிலையங்களில் பதிவாகியுள்ளன.பொதுமக்கள் குறிப்பாகத் தனியாகப் பயணிக்கும் பயணிகள் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தப்படுகின்றனர்:பேருந்துகளிலோ அல்லது பொது இடங்களிலோ அறிமுகம் இல்லாதவர்கள் வழங்கும் உணவுப் பொருட்கள், பிஸ்கட், குளிர்பானங்கள் அல்லது எந்தவொரு பொருளையும் பெற்றுக்கொள்ளவோ அல்லது சாப்பிடவோ வேண்டாம்.நீண்ட தூரப் பயணங்களின் போது அதிக விழிப்புணர்வுடன் இருக்கவும்.சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்து அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் வழங்கவும்.தங்கள் பயணங்களின் போது மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், அறிமுகமில்லாத நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறும் பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

TAGGED:crimemuthalvanSri Lanka Policetamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கோட்டாபய பதவியேற்ற ஒரே வாரத்தில் பிள்ளையானை பிணையில் எடுக்க திட்டம் வாக்குமூலம் வழங்கிய அசாத் மௌலானா

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்னும் பிள்ளையான் சிறையிலிருந்தபோது, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

அரசாங்க ஊழல்களை வெளிப்படுத்தியதால் நெருக்கடிக்கு உள்ளாகிறேன் – கம்மன்பில குற்றச்சாட்டு
உள்நாடு

அரசாங்க ஊழல்களை வெளிப்படுத்தியதால் நெருக்கடிக்கு உள்ளாகிறேன் – கம்மன்பில குற்றச்சாட்டு

By news team
உலக சந்தையில் தங்கம் வரலாற்று சாதனை – ஒரு அவுன்ஸ் விலை உயர்வு
உலகம்

உலக சந்தையில் தங்கம் வரலாற்று சாதனை – ஒரு அவுன்ஸ் விலை உயர்வு

By news team
பெற்றோருக்கு குடை கொடுக்கச் சென்ற 23 வயது பெண் மின்னல் தாக்கி பலி
உள்நாடு

பெற்றோருக்கு குடை கொடுக்கச் சென்ற 23 வயது பெண் மின்னல் தாக்கி பலி

By news team
தர்பூசணி சாப்பிட்ட சில மணி நேரங்களில் சிறுவன் பலி – 3 பேர் வைத்தியசாலையில்
இந்தியா

தர்பூசணி சாப்பிட்ட சில மணி நேரங்களில் சிறுவன் பலி – 3 பேர் வைத்தியசாலையில்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?