By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, May 30, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
இந்தியா

ஒடிசாவில் 7-ம் வகுப்பு மாணவியை பல முறை பாலியல் துஸ்பிரயோகம் செய்த 5 ஆசிரியர்கள் கைது

news team
Last updated: February 26, 2026 9:01 am
By news team
Share
1 Min Read
ஒடிசாவில் 7-ம் வகுப்பு மாணவியை பல முறை பாலியல் துஸ்பிரயோகம் செய்த 5 ஆசிரியர்கள் கைது
SHARE

ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தில் 13 வயது சிறுமி ஒருத்தி அங்குள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தாள். அவளிடம் ஆசிரியர் ஒருவர் சில மாதங்களுக்கு முன்பு தவறாக நடந்து கொண்டுள்ளார்.பின்னர் அவர் அடிக்கடி அந்த மாணவியை பலாத்காரம் செய்து வந்துள்ளார். இந்த தகவல் மற்ற சில ஆசிரியர்களுக்கும் தெரியவர நீண்ட நாட்களாக மேலும் 4 ஆசிரியர்கள் சிறுமியை பலாத்காரம் செய்தனர்.இதுகுறித்து அந்த மாணவி சமீபத்தில் தனது பெற்றோரிடம் கூறி உள்ளார். இதையடுத்து சிறுமியின் தந்தை மாவட்ட குழந்தைகள் நலக் குழுவின் உதவியை நாடினார். அவர்கள் தனித்தனியாக பொலிஸில் புகார் அளித்தனர்.இதையடுத்து பள்ளி ஆசிரியர்கள் 5 பேரும் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து கேந்திரபாரா மாவட்ட மூத்த காவல் அதிகாரி கூறுகையில், “மாணவி அளித்த தகவலின் அடிப்படையில், அவரின் தந்தை முதலில் மாவட்ட குழந்தைகள் நலக் குழுவை அணுகியுள்ளாா்அவா்கள் நடத்திய விசாரணையில், பள்ளியின் 5 ஆசிரியா்கள் மாணவியை தொடா் பாலியல் வன்கொடுமை செய்தது உறுதி செய்யப்பட்டது.அதனடிப்படையில் அவா்கள் ராஜ்கனிகா காவல்நிலையத்தில் புகாா் அளித்தனா். அந்தப் புகாரின் அடிப்படையில், பொலிஸார் விசாரணை நடத்தி, 5 ஆசிரியா்களையும் கைது செய்தனா்.இந்தச் சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட கல்வி அலுவலரையும் மாவட்ட குழந்தைகள் நலக்குழு அறிவுறுத்தியுள்ளது” என்றாா்.இதனிடையே கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

TAGGED:muthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கோட்டாபய பதவியேற்ற ஒரே வாரத்தில் பிள்ளையானை பிணையில் எடுக்க திட்டம் வாக்குமூலம் வழங்கிய அசாத் மௌலானா

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்னும் பிள்ளையான் சிறையிலிருந்தபோது, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

உத்தரப்பிரதேசம்: திருமண ஊர்வல னுது சத்தம் காரணமாக கோழி பண்ணையில் 140 கோழிகள் உயிரிழப்பு
இந்தியா

உத்தரப்பிரதேசம்: திருமண ஊர்வல DJ சத்தம் காரணமாக கோழி பண்ணையில் 140 கோழிகள் உயிரிழப்பு

By news team
இலங்கையில் வீட்டு உரிமையாளர்களுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கை
உள்நாடு

இலங்கையில் வீட்டு உரிமையாளர்களுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கை

By news team
தலங்கம பகுதியில் இணையதளம் வழி சட்டவிரோத நடவடிக்கை – பெண் ஒருவர் உட்பட 37 சீனப் பிரஜைகள் கைது
உள்நாடு

தலங்கம பகுதியில் இணையதளம் வழி சட்டவிரோத நடவடிக்கை – பெண் ஒருவர் உட்பட 37 சீனப் பிரஜைகள் கைது

By news team
காத்தான்குடி ஆலயம் அருகே புதையல் தோண்டிய சம்பவம் – 16 வயது சிறுவன் உட்பட 9 பேர் கைது
உள்நாடு

காத்தான்குடி ஆலயம் அருகே புதையல் தோண்டிய சம்பவம் – 16 வயது சிறுவன் உட்பட 9 பேர் கைது

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?