By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Apr 4, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

சிலாபத்தில் 14 வயது மாணவி துஸ்பிரயோகம்: உறவினர் கைது காதலனுக்கு பொலிஸார் வலைவீச்சு

news team
Last updated: February 25, 2026 2:27 pm
By news team
Share
2 Min Read
சிலாபத்தில் 14 வயது மாணவி துஸ்பிரயோகம்: உறவினர் கைதுஇ காதலனுக்கு பொலிஸார் வலைவீச்சு
SHARE

சிலாபம் பகுதியில் தனது தாய் மற்றும் தந்தையுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்த சிறுமி ஒருவர், அவரது நடத்தையில் ஏற்பட்ட மாற்றத்திற்கான காரணத்தைக் கண்டறிய சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் , குறித்த சிறுமி , உறவினர் மற்றும் காதலனால் துஸ்பிரயோக செய்த சம்பவம் அம்பலமாகியுள்ளது.பதின்ம வயதான சிறுமி ஏற்கனவே இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை அதிர்ச்சிகரமான முறையில் தெரியவந்துள்ளதாக சிலாபம் பொலிஸின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் தெரிவித்துள்ளது.ஆரச்சிகட்டுவ பிரதேசத்தில் உள்ள அரச பாடசாலையொன்றில் 9 ஆம் தரத்தில் கல்வி பயிலும் 14 வயது மற்றும் 7 மாதங்களையுடைய மாணவியே இவ்வாறு பாதிப்புக்குள்ளாகியுள்ளார்.சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனையைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமி பொலிஸாரிடம் விரிவான வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார்.கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி, நாத்தாண்டிய – வலகாப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த உறவினர் ஒருவர் தனது வீட்டில் வைத்து முதன்முதலில் அத்துமீறலில் ஈடுபட்டதாகச் சிறுமி மாரவில பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.இச்சம்பவம் குறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டிய அந்த உறவினர், சிறுமிக்கு 500 ரூபா பணத்தையும் வழங்கியுள்ளார்.இச்சம்பவம் தொடர்பில் 37 வயதுடைய சந்தேகநபர் மாரவில பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் மாரவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.இதனைத் தவிர, 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5 ஆம் திகதி, நாவலப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த தனது காதலனுடன் ஒரே நாளில் இரண்டு முறை உடலுறவில் ஈடுபட்டதாகச் சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார்.தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக அவர் உறுதியளித்ததால், இச்சம்பவம் குறித்து யாருக்கும் தெரிவிக்காமல் மறைத்ததாகச் சிறுமி குறிப்பிட்டுள்ளார். குறித்த சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் சிறுமியின் தாய் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.தலைமறைவாக உள்ள சந்தேகநபரான காதலனைக் கைது செய்ய சிலாபம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.தற்போது தனது தாயின் பாதுகாப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ள சிறுமி தொடர்பில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மேலதிக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

TAGGED:muthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கிளிநொச்சி தர்மபுரம் விபத்து – இரண்டு இளைஞர்கள் பலி

கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

ஹோர்முஸ் நீரிணையை கடக்க முயன்றால் 'தீ வைத்துக் கொளுத்திவிடுவோம்' – ஈரான் கடும் எச்சரிக்கை
உலகம்

ஹோர்முஸ் நீரிணையை கடக்க முயன்றால் ‘தீ வைத்துக் கொளுத்திவிடுவோம்’ – ஈரான் கடும் எச்சரிக்கை

By news team
பால் தேநீரின் விலையை குறைக்க தீர்மானம்
உள்நாடு

பால் தேநீரின் விலையை குறைக்க தீர்மானம்

By news team
ஈரான் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு; அதிகாரிகளுடன் சந்திப்பு ரத்து – ட்ரம்ப் அறிவிப்பு
உலகம்

ஈரான் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு; அதிகாரிகளுடன் சந்திப்பு ரத்து – ட்ரம்ப் அறிவிப்பு

By news team
மட்டக்களப்பில் போலி 5,000 ரூபா தாளால் மரக்கறி வியாபாரிக்கு மோசடி
உள்நாடு

மட்டக்களப்பில் போலி 5,000 ரூபா தாளால் மரக்கறி வியாபாரிக்கு மோசடி

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?