By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Feb 21, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் காணி தகராறு – ஒருவர் கொலை, 3 பேர் தலைமறைவு

news team
Last updated: February 16, 2026 8:20 pm
By news team
Share
1 Min Read
யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் காணி தகராறு – ஒருவர் கொலை, 3 பேர் தலைமறைவு
SHARE

யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியில் நிலவிய நீண்டகால காணித் தகராறு காரணமாக ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில், அவர்களைக் கைது செய்யக் கோப்பாய் பொலிஸார் விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.கோப்பாய் கல்வியியற் கல்லூரிக்கு அருகில் இன்று (16) இடம்பெற்ற இந்தத் தாக்குதலில், அப்பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை செல்வரஞ்சன் (59 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த நபருக்கும் மற்றுமொரு தரப்பினருக்கும் இடையில் நீண்டகாலமாகக் காணிப் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இன்று திங்கட்கிழமை இது தொடர்பாக ஏற்பட்ட தர்க்கம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளது. இதன்போது மூவர் இணைந்து நடத்திய தாக்குதலில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.சம்பவம் குறித்துக் கோப்பாய் பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். தாக்குதலை நடத்திய மூவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களைத் தேடி விசேட சுற்றிவளைப்புகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டு, உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

TAGGED:crimedeathmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மூன்று குழந்தைகளின் தாய் படுகொலை: கணவன் பொலிஸ் நிலையத்தில் சரண்

காலி - நெலுவ, ஹக்பிட்டிய பகுதியில், குடும்ப தகராறு காரணமாக மனைவியின் கழுத்தை அறுத்து கணவன்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

ஈரான் தொடர்பான அமெரிக்க வர்த்தகத் தீர்மானம் – இலங்கை ஏற்றுமதிக்கு அபாய எச்சரிக்கை
உள்நாடு

ஈரான் தொடர்பான அமெரிக்க வர்த்தகத் தீர்மானம் – இலங்கை ஏற்றுமதிக்கு அபாய எச்சரிக்கை

By news team
13 வயது சிறுமி தாக்குதல் குற்றச்சாட்டு: கனடாவில் இலங்கைத் தமிழ் பெண் கைது
உலகம்

13 வயது சிறுமி தாக்குதல் குற்றச்சாட்டு: கனடாவில் இலங்கைத் தமிழ் பெண் கைது

By news team
போலித் தங்க ஆபரண விற்பனை: நான்கு பெண்கள் உட்பட ஐந்து பேர் கைது
உள்நாடு

போலித் தங்க ஆபரண விற்பனை: நான்கு பெண்கள் உட்பட ஐந்து பேர் கைது

By news team
18 வயதிற்குட்பட்ட சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டை கட்டுப்படுத்த அரசு தீவிர பரிசீலனை
உள்நாடு

18 வயதிற்குட்பட்ட சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டை கட்டுப்படுத்த அரசு தீவிர பரிசீலனை

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?