By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Aug 21, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

ரூ.2 கோடிக்கு மேல் மதிப்புள்ள ‘குஷ்’ போதைப்பொருள்: கட்டுநாயக்க விமான நிலையத்தில் யாழ். வர்த்தகர் உட்பட மூவர் கைது

news team
Last updated: February 6, 2026 8:15 am
By news team
Share
1 Min Read
ரூ.2 கோடிக்கு மேல் மதிப்புள்ள 'குஷ்' போதைப்பொருள்: கட்டுநாயக்க விமான நிலையத்தில் யாழ். வர்த்தகர் உட்பட மூவர் கைது
SHARE

இரண்டு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ‘குஷ்’ ரக போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டு வந்த இலங்கை பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, இந்தப் போதைப்பொருள் தொகுதியை மன்னார் பகுதிக்கு கொண்டு செல்வதற்காக மேலும் இருவர் நீர்கொழும்பு நகரிலுள்ள சொகுசு விற்பனை நிலையத்திற்கு அருகில் காத்திருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.அதற்கமைய, இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் அந்த இரு நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட பயணி யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் எனவும், அவர் அடிக்கடி வான்பயணங்களை மேற்கொள்ளும் ஒரு வர்த்தகர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.அவர் இன்று அதிகாலை 12.35 மணியளவில் தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து தாய்லாந்து ஏர்வேஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.குறித்த பயணியின் பயணப் பையின் ரகசியப் பகுதியில் இரண்டு பொதிகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ 116 கிராம் ‘குஷ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.இதன் சந்தைப் பெறுமதி 2 கோடியே 11 இலட்சத்து 60 ஆயிரம் (ரூபா 21,160,000) என மதிப்பிடப்பட்டுள்ளது.உடன் கைது செய்யப்பட்ட ஏனைய இருவர் மன்னார் பகுதியைச் சேர்ந்த 43 மற்றும் 36 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் தொழில்நுட்பவியலாளராகப் பணியாற்றி வருபவராவார். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காகக் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களையும் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

TAGGED:arrestdrugmuthalvanSri Lanka Police Investigationtamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மொனராகலையில் கோர விபத்து: 5 பேர் உயிரிழப்பு

மொனராகலை, கும்புக்கான பகுதியில் இன்று (21) காலை டிப்பர் லொறியும் டிராக்டரும் மோதிய விபத்தில் 5…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

எம்.பிக்களின் ஓய்வூதியங்கள் இரத்து சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணல்ல – உயர் நீதிமன்றம் ஒப்புதல்
உள்நாடு

எம்.பிக்களின் ஓய்வூதியங்கள் இரத்து சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணல்ல – உயர் நீதிமன்றம் ஒப்புதல்

By news team
“கொள்ளையர்கள் போல நடந்தோம்” – எண்ணெய் கப்பல் கைப்பற்றியதாக ட்ரம்ப் தகவல்
உலகம்

“கொள்ளையர்கள் போல நடந்தோம்” – எண்ணெய் கப்பல் கைப்பற்றியதாக ட்ரம்ப் தகவல்

By news team
ரஷ்யாவில் எண்ணெய் கொள்வனவு செய்ய அமெரிக்கா 30 நாள் அனுமதி
உலகம்

ரஷ்யாவில் எண்ணெய் கொள்வனவு செய்ய அமெரிக்கா 30 நாள் அனுமதி

By news team
இலங்கை கடற்பரப்பில் இராணுவ நடவடிக்கை இல்லை என அமெரிக்கா உறுதி தர வேண்டும் -ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை
உள்நாடு

இலங்கை கடற்பரப்பில் இராணுவ நடவடிக்கை இல்லை என அமெரிக்கா உறுதி தர வேண்டும் -ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?