By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Aug 21, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

மூடப்படும் அபாயத்தில் 1,500 பாடசாலைகள்: ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை

news team
Last updated: February 5, 2026 8:00 am
By news team
Share
1 Min Read
மூடப்படும் அபாயத்தில் 1,500 பாடசாலைகள்: ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை
SHARE

நாட்டில் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தினால், மலையக மாணவர்களின் இலவச கல்வி உரிமை பாதிக்கப்படலாம் என இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.நுவரெலியாவில் நேற்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அந்தச் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட செயலாளர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.50-க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட சுமார் 1,500 பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை 3,000 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார்.தற்போது மாணவர்கள் 3 கிலோமீற்றர் சுற்றளவிற்குள் கல்வி கற்கும் வகையில் பாடசாலைகள் அமைந்துள்ளன. எனினும், புதிய சுற்றுநிரூபத்தின் ஊடாக இந்தத் தூரத்தை 5 கிலோமீற்றராக அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இது ஒரு திட்டமிட்ட செயல் எனச் சுட்டிக்காட்டிய அவர், முறையான போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் மலையக மாணவர்கள் மீண்டும் பழைய நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என வேதனை வெளியிட்டார்.மலையக மாணவர்களின் முன்னேற்றத்திற்கு கல்வி மட்டுமே ஒரே வழி என்பதைக் கருத்தில் கொண்டு, இந்த விவகாரத்தில் அரசாங்கம் மீளாய்வு செய்ய வேண்டும் என அவர் இதன்போது வலியுறுத்தினார்.இதேவேளை, அரசாங்கம் சமத்துவமான கல்வி என்றுக் கூறினாலும் இதுவரை சமத்துவமான பாடசாலைகள் உருவாக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

TAGGED:muthalvanschool studentSri Lankan Schoolstamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மொனராகலையில் கோர விபத்து: 5 பேர் உயிரிழப்பு

மொனராகலை, கும்புக்கான பகுதியில் இன்று (21) காலை டிப்பர் லொறியும் டிராக்டரும் மோதிய விபத்தில் 5…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

இலங்கைக்கு மேலும் எரிவாயு கப்பல்: தட்டுப்பாடு இல்லை என லிட்ரோ உறுதி
உள்நாடு

இலங்கைக்கு மேலும் எரிவாயு கப்பல்: தட்டுப்பாடு இல்லை என லிட்ரோ உறுதி

By news team
பத்து இலட்சம் ரூபாய் லாட்டரி பரிசு பெற்ற நபர் வீடு திரும்பும் வழியில் நடந்த உந்துருளி விபத்தில் உயிரிழப்பு
உள்நாடு

பத்து இலட்சம் ரூபாய் லாட்டரி பரிசு பெற்ற நபர் வீடு திரும்பும் வழியில் நடந்த உந்துருளி விபத்தில் உயிரிழப்பு

By news team
புலம்பெயர் பணப்பரிவர்த்தனை 26.5% உயர்வு – 2026 முதல் காலாண்டில் $2.29 பில்லியன் வரவு
உள்நாடு

புலம்பெயர் பணப்பரிவர்த்தனை 26.5% உயர்வு – 2026 முதல் காலாண்டில் $2.29 பில்லியன் வரவு

By news team
கோட்டாபய பதவியேற்ற ஒரே வாரத்தில் பிள்ளையானை பிணையில் எடுக்க திட்டம் வாக்குமூலம் வழங்கிய அசாத் மௌலானா
உள்நாடு

கோட்டாபய பதவியேற்ற ஒரே வாரத்தில் பிள்ளையானை பிணையில் எடுக்க திட்டம் வாக்குமூலம் வழங்கிய அசாத் மௌலானா

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?