By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, May 30, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உலகம்

ஈரான் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு; அதிகாரிகளுடன் சந்திப்பு ரத்து – ட்ரம்ப் அறிவிப்பு

news team
Last updated: January 14, 2026 6:33 am
By news team
Share
1 Min Read
ஈரான் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு; அதிகாரிகளுடன் சந்திப்பு ரத்து – ட்ரம்ப் அறிவிப்பு
SHARE

ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. பணவீக்கம் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. மேலும், அரசியல் குழப்பம், வேலைவாய்ப்பின்மை உள்பட பல்வேறு பிரச்சினைகள் அந்நாட்டில் நிலவி வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டு உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக கடந்த மாதம் 28ம் தேதி முதல் மக்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் 31 மாகாணங்களில் போராட்டம் பரவியுள்ளது.போராட்டத்தை கமேனி தலைமையிலான அரசு ஒடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. போராட்டக்காரர்களை சுட்டுக்கொல்லும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. அரசுக்கு எதிராக நடந்துவரும் போராட்டத்தில் இதுவரை 2 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை ஈரான் அரசு கைது செய்துள்ளது. ஈரானில் அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் மக்கள் போராட்டத்திற்கு அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன.இந்நிலையில், ஈரானில் போராடி வரும் மக்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஆதரவு அளித்துள்ளார். மேலும், ஈரான் மக்களுக்கு உதவி வந்துகொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக டொனால்டு டிரம்ப் தனது ட்ரூத் சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ஈரான் தேசபக்தர்களே தொடர்ந்து போராடுங்கள். உங்கள் அரசை கட்டுப்பாட்டுக்குள் எடுங்கள். கொலைகாரர்கள், அதிகார துஷ்பிரயோகம் செய்பவர்களின் பெயர்களை குறித்துவைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் அதிக விலை கொடுக்கப்போகிறார்கள். போராட்டக்காரர்களை அர்த்தமற்ற முறையில் படுகொலை செய்வது நிறுத்தப்படும்வரை ஈரான் அதிகாரிகளுடனான அனைத்து சந்திப்பையும் நான் ரத்து செய்துள்ளேன். உதவி வந்து கொண்டிருக்கிறது’ இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAGGED:americaDonald TrumpIranmuthalvanProtesttamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கோட்டாபய பதவியேற்ற ஒரே வாரத்தில் பிள்ளையானை பிணையில் எடுக்க திட்டம் வாக்குமூலம் வழங்கிய அசாத் மௌலானா

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்னும் பிள்ளையான் சிறையிலிருந்தபோது, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

ஜனாதிபதி அனுரவை சந்தித்த ஜெய்ஷங்கர் – இலங்கைக்கு 450 மில்லியன் டொலர் மீள்கட்டமைப்பு உதவி
உள்நாடு

ஜனாதிபதி அனுரவை சந்தித்த ஜெய்ஷங்கர் – இலங்கைக்கு 450 மில்லியன் டொலர் மீள்கட்டமைப்பு உதவி

By news team
ஈரானில் பெண்களுக்கு மோட்டார்சைக்கிள் உரிமம்: பல ஆண்டுகால தடைக்கு முடிவு
உலகம்

ஈரானில் பெண்களுக்கு மோட்டார்சைக்கிள் உரிமம்: பல ஆண்டுகால தடைக்கு முடிவு

By news team
நீர்கொழும்பில் மின்சாரம் தாக்கி 27 வயது இளைஞர் பலி – மின்விசிறி திருத்த முயற்சியில் துயரம்
உள்நாடு

நீர்கொழும்பில் மின்சாரம் தாக்கி 27 வயது இளைஞர் பலி – மின்விசிறி திருத்த முயற்சியில் துயரம்

By news team
ஆக்சிஜன் சிலிண்டரை சுமந்து மனைவியை கோவிலுக்கு அழைத்துச் சென்ற கணவன் – நெகிழ்ச்சி சம்பவம்
இந்தியா

ஆக்சிஜன் சிலிண்டரை சுமந்து மனைவியை கோவிலுக்கு அழைத்துச் சென்ற கணவன் – நெகிழ்ச்சி சம்பவம்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?