By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Aug 21, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட்டில் 750 விக்கெட்டுகள் – புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்

news team
Last updated: December 23, 2025 4:04 am
By news team
Share
1 Min Read
சர்வதேச கிரிக்கெட்டில் 750 விக்கெட்டுகள் – புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்
SHARE

சர்வதேச கிரிக்கெட்டில் 750 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது அவுஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை மிட்செல் ஸ்டார்க் பெற்றுள்ளார்.அவுஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.மொத்தம் 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இதுவரை மூன்று போட்டிகள் முடிந்துள்ள நிலையில், மூன்றிலும் அவுஸ்திரேலிய அணி அபார வெற்றியைப் பதிவு செய்து 3-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றுள்ளது. மேலும் ஆஷஸ் கிண்ணத்தையும் அந்த அணி கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்த நிலையில், அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் இப்போட்டியில் மொத்தமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தனது 750 விக்கெட்டுகளை பூர்த்தி செய்திருந்தார்.
இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அவுஸ்திரேலிய அணிக்காக 750+ விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.இதற்கு முன் ஷேன் வார்னே மற்றும் கிளென் மெக்ராத் ஆகியோர் மட்டுமே இந்த சாதனையைப் படைத்திருந்தனர்.இதுதவிர்த்து சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலிலும் மிட்செல் ஸ்டார்க் 13ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.அவுஸ்திரேலிய அணிக்காக கடந்த 2010ஆம் ஆண்டு அறிமுகமான மிட்செல் ஸ்டார்க், ஒட்டுமொத்தமாக (ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20) 298 போட்டிகளில் விளையாடி 750 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.இதில் அவர் 27 முறை ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளையும், ஒரு போட்டியில் 3 முறை 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.மேலும் 2015, 2023ஆம் ஆண்டு ஐ.சி.சி .ஒருநாள் உலகக்கிண்ண மற்றும் 2021ஆம் ஆண்டு டி20 உலகக்கிண்ணத்தை வென்ற அவுஸ்திரேலிய அணியில் முக்கிய பங்கு வகித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

TAGGED:muthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மொனராகலையில் கோர விபத்து: 5 பேர் உயிரிழப்பு

மொனராகலை, கும்புக்கான பகுதியில் இன்று (21) காலை டிப்பர் லொறியும் டிராக்டரும் மோதிய விபத்தில் 5…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

வென்னப்புவ சர்வதேச பாடசாலையில் மாணவிகளின் குடிநீர் போத்தல்களில் மர்மமான முறையில் கலந்த குளிசைகள்
உள்நாடு

வென்னப்புவ சர்வதேச பாடசாலையில் மாணவிகளின் குடிநீர் போத்தல்களில் மர்மமான முறையில் கலந்த குளிசைகள்

By news team
12 பேர் உயிரிழந்த தீ விபத்து தொடர்பில் பராமரிப்பு நிலைய உரிமையாளர் கைது
உள்நாடு

12 பேர் உயிரிழந்த தீ விபத்து தொடர்பில் பராமரிப்பு நிலைய உரிமையாளர் கைது

By news team
ரூ.6 இலட்சம் பெறுமதியான அலங்கார மலர்ச் செடிகளுடன் இலங்கை பயணி கைது
உள்நாடு

ரூ.6 இலட்சம் பெறுமதியான அலங்கார மலர்ச் செடிகளுடன் இலங்கை பயணி கைது

By news team
ரஷ்யாவில் எண்ணெய் கொள்வனவு செய்ய அமெரிக்கா 30 நாள் அனுமதி
உலகம்

ரஷ்யாவில் எண்ணெய் கொள்வனவு செய்ய அமெரிக்கா 30 நாள் அனுமதி

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?