By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Aug 21, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

30 ஆண்டு சட்டப் போராட்டத்தில் தாய்க்கு வெற்றி; மகனின் மேல்முறையீடு தள்ளுபடி

news team
Last updated: June 9, 2026 2:50 pm
By news team
Share
2 Min Read
30 ஆண்டு சட்டப் போராட்டத்தில் தாய்க்கு வெற்றி; மகனின் மேல்முறையீடு தள்ளுபடி
SHARE

இலங்கையில் தாய் ஒருவர் மகனுக்கு எதிராக நடத்தி வந்த 30 வருட கால சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. மிரிஹான பிரதீசத்தில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,வங்கிக் கடன் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக மாத்திரம் மகனின் பெயருக்கு மாற்றப்பட்ட குடியிருப்புச் சொத்து ஒன்றின் உண்மையான உரிமையாளர் தாய் என மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மிரிஹான பகுதியில் உள்ள தனது வீட்டை, 1987ஆம் ஆண்டு வங்கிக் கடன் வசதியைப் பெற்றுக்கொள்வதற்காக மாத்திரம் தனது மகனின் பெயருக்கு இந்தத் தாய் மாற்றியிருந்தார்.எனினும், கடனை அடைத்த பின்னர் அதனைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடனேயே சொத்து மாற்றப்பட்டது என்றும், அதன் முழுமையான உரிமையை மகனுக்கு வழங்கும் நோக்கம் தனக்கு இருக்கவில்லை என்றும் தாய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.ஆனால், தான் அதனை 125,000 ரூபாவிற்கு விலைக்கு வாங்கியதாக மகன் வாதிட்டிருந்தார். இது தொடர்பான சட்டப் போராட்டம் 1997ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நிலையில், கல்கிஸ்சை மாவட்ட நீதிமன்றம் மற்றும் மேல் நீதிமன்றம் என்பன தாய்க்கு சாதகமாக தீர்ப்பளித்தன.இதனை எதிர்த்து மகன் தரப்பால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.தலைமை நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன, நீதியரசர்களான ஜனக் டி சில்வா மற்றும் அர்ஜுன ஒபயசேகர ஆகிய மூவர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம், கீழ் நீதிமன்றங்களின் தீர்ப்புகளை ஏகமனதாக உறுதிசெய்து மகனின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது.நம்பிக்கைப் பொறுப்பு கட்டளைச் சட்டத்தின் 83ஆம் பிரிவின் கீழ், ஒரு சொத்து மாற்றப்படும் போதுள்ள சூழ்நிலைகளைக் கருதி, அதன் உண்மையான உரிமை யாருக்குரியது என்பதை நீதிமன்றம் தீர்மானிக்க முடியும் என சுட்டிக்காட்டிய நீதியரசர்கள், தாய் பெரும் சிரமத்திற்கு மத்தியில் வாங்கிய ஒரேயொரு குடியிருப்பு இதுவென்பதாலும், பெறப்பட்ட கடன் வீட்டை விரிவுபடுத்தவே பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதாலும் இதன் உண்மையான உரிமையாளர் தாயே எனத் தீர்ப்பளித்தனர்.இதன் மூலம் தனது மகனுக்கு எதிராக தாய் நடத்தி வந்த 30 வருட கால சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதுடன் நீதிமன்ற தீர்ப்பால் அந்த தாயாரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

TAGGED:Court of Appeal of Sri Lankamuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மொனராகலையில் கோர விபத்து: 5 பேர் உயிரிழப்பு

மொனராகலை, கும்புக்கான பகுதியில் இன்று (21) காலை டிப்பர் லொறியும் டிராக்டரும் மோதிய விபத்தில் 5…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

புறக்கோட்டை பஸ் நிலையத்தில் சேதப்படுத்தும் நபர்களுக்கு கடும் நடவடிக்கை – போக்குவரத்து பிரதி அமைச்சர் எச்சரிக்கை
உள்நாடு

புறக்கோட்டை பஸ் நிலையத்தில் சேதப்படுத்தும் நபர்களுக்கு கடும் நடவடிக்கை – போக்குவரத்து பிரதி அமைச்சர் எச்சரிக்கை

By news team
இலங்கையில் டெங்கு பாதிப்பு 50,000-ஐ கடந்தது – 30 பேர் உயிரிழப்பு
உள்நாடு

இலங்கையில் டெங்கு பாதிப்பு 50,000 கடந்தது – 30 பேர் உயிரிழப்பு

By news team
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் முன்னாள் அரசியல் தலைவர் விரைவில் கைது
உள்நாடு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் முன்னாள் அரசியல் தலைவர் விரைவில் கைது

By news team
தெமட்டகொடவில் 19 கைத்துப்பாக்கிகளுடன் 4 பேர் கைது; மேலதிக விசாரணைகள் தீவிரம்
உள்நாடு

தெமட்டகொடவில் 19 கைத்துப்பாக்கிகளுடன் 4 பேர் கைது; மேலதிக விசாரணைகள் தீவிரம்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?