By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Jun 6, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

12 பேர் உயிரிழந்த தீ விபத்து தொடர்பில் பராமரிப்பு நிலைய உரிமையாளர் கைது

news team
Last updated: June 4, 2026 1:52 pm
By news team
Share
1 Min Read
12 பேர் உயிரிழந்த தீ விபத்து தொடர்பில் பராமரிப்பு நிலைய உரிமையாளர் கைது
SHARE

அங்குருவாதொட, பட்டகொட பகுதியில் அமைந்துள்ள தனியார் முதியோர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார், குறித்த தனியார் முதியோர் பராமரிப்பு நிலையத்தின் உரிமையாளரை தற்போது கைது செய்துள்ளனர்.இவ்விபத்தில் காயமடைந்த 7 பேர் தற்போது ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். எனினும், தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் அந்த இல்லத்திற்குள் சுமார் 72 பேர் வரை இருந்துள்ளனர். அவர்களில் 51 பேர் எவ்வித ஆபத்துகளுமின்றி தீயணைப்புப் படையினர் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, தற்போது தற்காலிக தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.’மவ்பிய செவன செநெஹஸே கெடெல்ல’ என்ற பெயரில் தனியார் நிறுவனமாக நடத்தப்பட்டு வந்த இந்த மையத்தில், முதியவர்களுடன் மனநலக் குறைபாடுடைய நபர்களும் தங்கியிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று (03) பிற்பகல் ஏற்பட்ட இந்தத் திடீர் தீ விபத்தினால் இல்லத்தின் பெரும்பகுதி முற்றிலும் எரிந்து சாம்பலாகியுள்ளதுடன், பலத்த சேதமும் ஏற்பட்டுள்ளது.தீ விபத்தின் கொடூரத்தினால் இல்லத்தில் இருந்த சிலர் தீயில் கருகியுள்ளனர். அவ்வாறு தீயில் கருகிய 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணைகள் இன்று (04) காலை நடத்தப்பட்டதை அடுத்து, சடலங்களை அவ்விடத்திலிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தீ விபத்து ஏற்பட்டதற்கான துல்லியமான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், இது குறித்து விரிவான விசாரணைகளை மேற்கொள்வதற்காக மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.இதன் ஒரு கட்டமாகவே, பராமரிப்பு நிலையத்தின் தரம், பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் அலட்சியப்போக்கு குறித்து விசாரிப்பதற்காக அதன் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

TAGGED:arrestfiremuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

வெந்நீர் பாத்திரத்தில் விழுந்த 1½ வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு

கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகா விஜயகிரி கிராமத்தை சேர்ந்தவர் பசப்பா. இவரது மனைவி…

You Might Also Like

கலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை – மன்னாரில் கடைக்கு கடும் நடவடிக்கை
உள்நாடு

கலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை – மன்னாரில் கடைக்கு கடும் நடவடிக்கை

By news team
2 கிலோ தங்க நகை திருடிய இளம் பெண் யாழில் கைது
உள்நாடு

2 கிலோ தங்க நகை திருடிய இளம் பெண் யாழில் கைது

By news team
திருமணம் என்ற பெயரில் சீனாவுக்குக் கடத்தப்படும் நேபாளப் பெண்கள் – மனிதக் கடத்தல் கும்பல் அம்பலம்
உலகம்

திருமணம் என்ற பெயரில் சீனாவுக்குக் கடத்தப்படும் நேபாளப் பெண்கள் – மனிதக் கடத்தல் கும்பல் அம்பலம்

By news team
அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கில் மரண தண்டனை கைதி உயிரிழப்பு
உள்நாடு

அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கில் மரண தண்டனை கைதி உயிரிழப்பு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?