By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Apr 4, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

ஹற்றன் பாடசாலையில் மாணவன் மீது தாக்குதல் – 3 பேர் கைது, மாணவன் வைத்தியசாலையில் அனுமதி

news team
Last updated: March 29, 2026 9:20 am
By news team
Share
1 Min Read
ஹற்றன் பாடசாலையில் மாணவன் மீது தாக்குதல் – 3 பேர் கைது, மாணவன் வைத்தியசாலையில் அனுமதி
SHARE

ஹற்றன் பகுதியிலுள்ள பிரதான பாடசாலையொன்றின் வகுப்பறைக்குள் மாணவன் ஒருவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேகத்தின் பேரில் இந்த மாணவர்கள் நேற்று (28) கைது செய்யப்பட்டதாக ஹற்றன் தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.தரம் 10 இல் கல்வி பயிலும் இரு மாணவர் குழுக்களிடையே கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட மோதலே இதற்குக் காரணமாகும்.ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, இந்த மோதலில் அந்தப் பாடசாலையின் பழைய மாணவர் ஒருவரும் சம்பந்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.இருப்பினும், இச்சம்பவம் பாடசாலையிலேயே சமரசம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அது தொடர்பான தாக்குதல் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியது.இதனையடுத்து, தாக்குதலுக்குள்ளான மாணவனின் தாயார் நேற்று (28) ஹற்றன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.அம்முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் இரண்டு மாணவர்கள் மற்றும் ஒரு பழைய மாணவர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.காயமடைந்த மாணவன் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட இரு மாணவர்கள் மற்றும் பழைய மாணவர் இன்று (29) ஹற்றன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.அதன் பின்னர் நீதவான் ஊடாக அவர்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என ஹற்றன் தலைமையகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

TAGGED:arrestmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

நாடளாவிய விசேட சோதனை நடவடிக்கை – 512 பேர் கைது

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்காக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

மகளின் நினைவாக 4.5 ஏக்கர் காணி தானம் – எம்பிலிபிட்டிய தந்தையின் நெகிழ்ச்சி செயல்
உள்நாடு

மகளின் நினைவாக 4.5 ஏக்கர் காணி தானம் – எம்பிலிபிட்டிய தந்தையின் நெகிழ்ச்சி செயல்

By news team
கர்நாடக மாநிலத்தில் செல்போன், டி.வி.க்கு இரவில் 2 மணி நேரம் தடை விதித்த கிராமம்
இந்தியா

கர்நாடக மாநிலத்தில் செல்போன், டி.வி.க்கு இரவில் 2 மணி நேரம் தடை விதித்த கிராமம்

By news team
நிபா வைரஸ் குறித்து இலங்கையில் எவ்வித அச்சுறுத்தலும் இல்லை – சுகாதார அமைச்சு
உள்நாடு

நிபா வைரஸ் குறித்து இலங்கையில் எவ்வித அச்சுறுத்தலும் இல்லை – சுகாதார அமைச்சு

By news team
ஏப்ரல் வரை எரிபொருள் பற்றாக்குறை இல்லை: அனைத்து இறக்குமதி முன்பதிவுகளும் உறுதி
உள்நாடு

ஏப்ரல் வரை எரிபொருள் பற்றாக்குறை இல்லை: அனைத்து இறக்குமதி முன்பதிவுகளும் உறுதி

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?