By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Aug 21, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

ருஹுணு பல்கலைக்கழக மாணவி டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு – “நான் இறக்காவிட்டால் வருவேன்” என்ற கடைசி இறுதி குறுந்தகவல்

news team
Last updated: June 24, 2026 3:11 pm
By news team
Share
1 Min Read
ருஹுணு பல்கலைக்கழக மாணவி டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு – "நான் இறக்காவிட்டால் வருவேன்" என்ற கடைசி இறுதி குறுந்தகவல்
SHARE

ருஹுணு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்த, மாத்தறை தெனியாய பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய சந்தலி தாரிகா என்ற மாணவி டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார்.அவரது இந்த திடீர் மறைவு, ருஹுணு பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் சங்கம் மற்றும் பல்கலைக்கழக சமூகத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.அத்துடன், அவர்கள் தங்களது இரங்கலையும் தெரிவித்துள்ளனர்.இதேவேளை, சந்தலி தாரிகா தனக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருந்த போது, தனது நடனக் குழுவினருக்கு தனது உடல்நிலை குறித்து அனுப்பிய குறுந்தகவலில் தனக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தன்னால் நடன நிகழ்விற்கு வர முடியாதெனவும், குறிப்பிட்டுள்ளார்.நான் இறக்காவிட்டால் வருவேன் என குறிப்பிட்டிருந்த செய்தி பலரையும் பெரும் சோகத்தை ஆழ்த்தியுள்ளது. எனினும் குறுந்தகவல் அனுப்பிய 5 நாட்களில் அவர் உயிரிழந்துள்ளார்.இந்த ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் நாடு முழுவதும் சுமார் 37,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.எனினும், தற்போது மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 50,000 என்ற எல்லையையும் தாண்டியுள்ளது என மருத்துவமனை வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.சமீபத்தில் நாட்டில் ஏற்பட்ட பருவமழை மற்றும் வெள்ளப் பெருக்குடன், இந்த நோய் பரவல் கட்டுப்பாடின்றி மிக வேகமாக அதிகரித்து வருகிறது.இந்த வைரஸ் நோய் பரவலில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளன.நிலைமையை கருத்திற் கொண்டு சுகாதார அமைச்சு பல பகுதிகளை உத்தியோகபூர்வமாக அதி அபாய வலயங்களாக அறிவித்துள்ளது.அதற்கமைய, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி, இரத்தினபுரி மற்றும் உயிரிழந்த மாணவியின் சொந்த ஊரான மாத்தறை ஆகிய மாவட்டங்கள் இந்த அதி அபாய வலயங்களுக்குள் அடங்குகின்றன.

TAGGED:deathDengue Prevalence in Sri Lankamuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மொனராகலையில் கோர விபத்து: 5 பேர் உயிரிழப்பு

மொனராகலை, கும்புக்கான பகுதியில் இன்று (21) காலை டிப்பர் லொறியும் டிராக்டரும் மோதிய விபத்தில் 5…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

பருத்தித்துறை நகரசபை எல்லையில் இன்று முதல் உணவகங்களில் லஞ்ச் சீற் தடை
உள்நாடு

பருத்தித்துறை நகரசபை எல்லையில் இன்று முதல் உணவகங்களில் லஞ்ச் சீற் தடை

By news team
அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு சம்பவம்: மனித உரிமை ஆணைக்குழு விசாரணை ஆரம்பம்
உள்நாடு

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு சம்பவம்: மனித உரிமை ஆணைக்குழு விசாரணை ஆரம்பம்

By news team
ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் குற்றச்சாட்டில் இருந்தால் நடவடிக்கை அவசியம் - எதிர்க்கட்சித் தலைவர் அதிரடி சவால்
உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் குற்றச்சாட்டில் இருந்தால் நடவடிக்கை அவசியம் – எதிர்க்கட்சித் தலைவர் அதிரடி சவால்

By news team
நயினாதீவு பகுதியில் இரு பூசாரிகளுக்கிடையிலான தகராறு வாள் வெட்டில் முடிவு – ஒருவர் உயிரிழப்பு
உள்நாடு

நயினாதீவு பகுதியில் இரு பூசாரிகளுக்கிடையிலான தகராறு வாள் வெட்டில் முடிவு – ஒருவர் உயிரிழப்பு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?