By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Feb 20, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

மு.க. ஸ்டாலின் 89,000 இலங்கையர்களுக்கு குடியுரிமை கோரிக்கை – நாமல் ராஜபக்ஷ வரவேற்பு

news team
Last updated: February 16, 2026 7:46 pm
By news team
Share
1 Min Read
மு.க. ஸ்டாலின் 89,000 இலங்கையர்களுக்கு குடியுரிமை கோரிக்கை – நாமல் ராஜபக்ஷ வரவேற்பு
SHARE

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முகாம்களில் உள்ள 89,000 இலங்கையர்களுக்கு இந்தியக் குடியுரிமை அல்லது நீண்டகால விசாக்களை வழங்குமாறு விடுத்த கோரிக்கையை வரவேற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இது குறித்த சில முக்கிய அவதானிப்புகளையும் முன்வைத்துள்ளார்.பல தசாப்தங்களாக முகாம்களில் வசித்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு நிலையான அந்தஸ்து மற்றும் கண்ணியமான வாழ்வைப் பெற்றுக்கொடுக்க இக்கோரிக்கை ஒரு நம்பிக்கையை அளிக்கிறது.எனினும், கடந்த காலங்களைப் போலவே தேர்தல் காலங்களில் இத்தகைய கோரிக்கைகள் முன்வைக்கப்படுவதைச் சுட்டிக்காட்டிய அவர், இக்கோரிக்கை தேர்தல் நோக்கங்களுக்காக அன்றி, தூய மனிதாபிமான அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்தார்.30 ஆண்டுகால யுத்தம் முடிவடைந்த பின்னர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் தமிழக முகாம்களில் இருந்த இலங்கையர்கள் சுயமாகவும் பாதுகாப்பாகவும் தாயகம் திரும்புவதற்குத் தங்களது அரசாங்கம் தொடர்ச்சியாக வழிவகை செய்ததாக அவர் நினைவு கூர்ந்தார்.சவாலான சூழலிலும் அவர்கள் தாயகத்தில் கௌரவமாக வாழ்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.தற்போது தமிழக முகாம்களில் இருந்து தாயகம் திரும்ப விரும்பும் இலங்கையர்களுக்குப் பல்வேறு முட்டுக்கட்டைகள் போடப்படுவதாகத் தகவல்கள் வருவதாகக் குறிப்பிட்ட நாமல் ராஜபக்ஷ, இது கவலையளிப்பதாகத் தெரிவித்தார்.இலங்கை அரசு இது குறித்து ஆராய்ந்து, நாடு திரும்ப விரும்புவோருக்குத் தடையின்றி வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.”இலங்கையர்கள் இந்தியாவில் எதிலிகள் முகாம்களில் தொடர்ந்து கஷ்டப்பட வேண்டிய அவசியமில்லை. அவர்கள் இலங்கைக்குத் திரும்பி உரிமையுள்ள பிரஜைகளாக வாழ முடியும்.”இந்த 89,000 இலங்கையர்களும் எமது நாட்டு மக்கள் எனக் குறிப்பிட்ட அவர், இலங்கை மற்றும் இந்திய மத்திய அரசுகளும், தமிழக அரசும் இந்த உணர்வுப்பூர்வமான மனிதாபிமான விவகாரத்தை அரசியலாக்காமல், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் நிரந்தரத் தீர்வை நோக்கி இணைந்து செயல்பட வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

TAGGED:muthalvannamaltamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மூன்று குழந்தைகளின் தாய் படுகொலை: கணவன் பொலிஸ் நிலையத்தில் சரண்

காலி - நெலுவ, ஹக்பிட்டிய பகுதியில், குடும்ப தகராறு காரணமாக மனைவியின் கழுத்தை அறுத்து கணவன்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

நீருக்கடியில் சதுரங்கப் போட்டி: உலக சாம்பியன் பட்டத்தை வென்ற நெதர்லாந்து
விளையாட்டு

நீருக்கடியில் சதுரங்கப் போட்டி: உலக சாம்பியன் பட்டத்தை வென்ற நெதர்லாந்து

By news team
கூட்டுறவு விற்பனை நிலையங்களில் ரூ.10,000க்கு மேல் வாங்குபவர்களுக்கு ஆயுள் காப்புறுதி இலவசம்
உள்நாடு

கூட்டுறவு விற்பனை நிலையங்களில் ரூ.10,000க்கு மேல் வாங்குபவர்களுக்கு ஆயுள் காப்புறுதி இலவசம்

By news team
ஹெரோயின் போதைப்பொருளுடன் 22 வயது பல்கலைக்கழக மாணவி கைது
உள்நாடு

ஹெரோயின் போதைப்பொருளுடன் 22 வயது பல்கலைக்கழக மாணவி கைது

By news team
அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு சம்பவம்: மனித உரிமை ஆணைக்குழு விசாரணை ஆரம்பம்
உள்நாடு

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு சம்பவம்: மனித உரிமை ஆணைக்குழு விசாரணை ஆரம்பம்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?