By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Oct 10, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துங்கள் – அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி கோரிக்கை

news team
Last updated: March 26, 2026 5:59 am
By news team
Share
1 Min Read
மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துங்கள் – அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி கோரிக்கை
SHARE

நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, மின்சாரத்தைப் பொதுமக்கள் மிகவும் சிக்கனமான முறையில் பயன்படுத்துமாறு அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி விசேட கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார்.மின்சாரப் பயன்பாட்டைக் குறைப்பது தனிப்பட்ட ரீதியில் மக்களின் பொருளாதாரத்துக்கும், ஒட்டுமொத்த தேசத்திற்கும் பாரிய நன்மையளிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.வீடுகளில் தற்போது தேவையற்ற முறையில் அதிக மின்விளக்குகள் ஒளிரவிடப்படுவதைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டார்.”உங்கள் வீட்டில் இரண்டு அல்லது மூன்று மின்விளக்குகள் ஒளிரவிடப்பட்டால், அவற்றில் இரண்டை அணைத்துவிட்டு அவசியமான ஒரு விளக்கை மாத்திரம் பயன்படுத்துங்கள்” என அவர் தெரிவித்தார்.இவ்வாறான சிறிய மாற்றங்கள் மக்களின் மாதாந்த மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க உதவும் என அவர் குறிப்பிட்டார்.அத்துடன், துணி துவைக்கும் இயந்திரங்களை நாளாந்தம் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.”சலவை இயந்திரங்களை ஒவ்வொரு நாளும் பயன்படுத்துவதற்குப் பதிலாக, மூன்று நாட்களுக்கு ஒருமுறை பயன்படுத்துங்கள்.வளர்ந்த நாடுகளின் மக்கள் இவ்வாறான தியாகங்களைச் செய்வதன் மூலமே முன்னேற்றமடைந்துள்ளனர்” என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.இவ்வாறான தியாகங்களைச் செய்யுமாறு தலைவர்கள் மக்களிடம் மாத்திரம் கூறவில்லை எனத் தெரிவித்த அமைச்சர், தலைவர்களாகிய தாங்களும் இத்தகைய சிக்கன நடவடிக்கைகளைத் தத்தமது வீடுகளில் நடைமுறையில் பின்பற்றி வருவதாகவும், முன்மாதிரியாகச் செயற்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

TAGGED:muthalvanpower cuttamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பாணந்துறையில் தொழிலதிபர் கடத்தல் – மனைவி காயம்

பாணந்துறை மஹாநாம வீதிக்கு அருகிலுள்ள வீதியொன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பிரபல வர்த்தகர் ஒருவர் அடையாளம்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

குறைந்த காற்றழுத்தம் காரணமாக கடும் மழை – பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
உள்நாடு

குறைந்த காற்றழுத்தம் காரணமாக கடும் மழை – பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

By news team
இலங்கையில் அரச ஊழியர்களுக்கு புதன்கிழமை விடுமுறை – எரிபொருள் நெருக்கடி காரணமாக புதிய தீர்மானம்
உள்நாடு

இலங்கையில் அரச ஊழியர்களுக்கு புதன்கிழமை விடுமுறை – எரிபொருள் நெருக்கடி காரணமாக புதிய தீர்மானம்

By news team
நாளை மீண்டும் நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பு - அரச மருத்துவமனைகளின் சேவைகள் முடங்கும் அபாயம்
உள்நாடு

நாளை மீண்டும் நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பு – அரச மருத்துவமனைகளின் சேவைகள் முடங்கும் அபாயம்

By news team
2026 கல்வியாண்டின் முதலாம் தவணை நாளை (05) தொடக்கம்
உள்நாடு

2026 கல்வியாண்டின் முதலாம் தவணை நாளை (05) தொடக்கம்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?