By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Feb 20, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

மருதனார்மடம் சந்தையில் துப்பாக்கிகளுடன் மர்ம நபர்; சிசிடிவியில் பதிவான காட்சி

news team
Last updated: February 10, 2026 12:48 pm
By news team
Share
1 Min Read
மருதனார்மடம் சந்தையில் துப்பாக்கிகளுடன் மர்ம நபர்; சிசிடிவியில் பதிவான காட்சி
SHARE

யாழ்ப்பாணம் – மருதனார்மடம் சந்தைக்கு இன்று காலை 06.03 மணியளவில் துப்பாக்கிகளுடன் வந்த மர்மநபர் ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டது.இது குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த நபர் பை ஒன்றினுள் ர-56 ரக துப்பாக்கியை வைத்துக்கொண்டு மருதனார்மடம் சந்தைக்கு இன்று காலை வந்துள்ளார்.இதன்போது அவரது இடுப்புக்குள்ளும் கைத்துப்பாக்கி போன்ற ஒரு அமைப்பு காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறு வருகை தந்த நபர், தனிநபர் ஒருவரது பெயரை விசாரித்துவிட்டு, வட்டிக்கு யார் பணம் கொடுக்கிறார்கள் என அங்கு விசாரித்ததாக கூறப்படுகிறது.கையில் கொண்டு வந்த பணிஸை சாப்பிட்டுக்கொண்டு, பின்னர் அங்கு பச்சை மிளகாயை வாங்கிக்கொண்டு சென்ற காட்சி அங்கிருந்த சிசிடிவி கமராக்களில் பதிவாகியுள்ளது.இவ்வாறு வந்தவர் கைகளுக்கு கறுப்புநிற கையுறைகளையும், தலையில் தலைக் கவசத்தையும் அணிந்திருந்ததை அவதானிக்க முடிந்தது.குறித்த நபர் அங்கிருந்து சென்றதும், சந்தையில் இருந்தவர்கள் சுன்னாகம் பொலிஸாருக்கு இது குறித்து தகவல் வழங்கியுள்ளனர்.சுன்னாகம் பொலிஸார் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

TAGGED:muthalvanSri Lanka Police Investigationtamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மூன்று குழந்தைகளின் தாய் படுகொலை: கணவன் பொலிஸ் நிலையத்தில் சரண்

காலி - நெலுவ, ஹக்பிட்டிய பகுதியில், குடும்ப தகராறு காரணமாக மனைவியின் கழுத்தை அறுத்து கணவன்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

பருத்தித்துறை நகரசபை எல்லையில் இன்று முதல் உணவகங்களில் லஞ்ச் சீற் தடை
உள்நாடு

பருத்தித்துறை நகரசபை எல்லையில் இன்று முதல் உணவகங்களில் லஞ்ச் சீற் தடை

By news team
ஈரான் நோக்கி அமெரிக்க போர்க்கப்பல்கள் – ஹவுதி தாக்குதல் மிரட்டல்
உலகம்

ஈரான் நோக்கி அமெரிக்க போர்க்கப்பல்கள் – ஹவுதி தாக்குதல் மிரட்டல்

By news team
அமரகீர்த்தி அத்துகோரள படுகொலை: 12 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனைக்கு மன்னிப்பு வழங்குமாறு கோரிக்கை
உள்நாடு

அமரகீர்த்தி அத்துகோரள படுகொலை: 12 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனைக்கு மன்னிப்பு வழங்குமாறு கோரிக்கை

By news team
இலங்கை நேரப்படி 3.30க்கு கிரிட்டிமாட்டி தீவில் புத்தாண்டு பிறந்தது
உலகம்

இலங்கை நேரப்படி 3.30க்கு கிரிட்டிமாட்டி தீவில் புத்தாண்டு பிறந்தது

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?