By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Tuesday, Apr 14, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

மதுபானப் போத்தல் இலஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு – தர்மபுரம் பொலிஸ் அதிகாரி இலஞ்ச ஊழல் அதிகாரிகளால் கைது

news team
Last updated: April 10, 2026 1:00 pm
By news team
Share
1 Min Read
மதுபானப் போத்தல் இலஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு – தர்மபுரம் பொலிஸ் அதிகாரி இலஞ்ச ஊழல் அதிகாரிகளால் கைது
SHARE

மதுபானப் போத்தல் ஒன்றை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் பேரில், தர்மபுரம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை அதிகாரிகளினால் நேற்று (9) கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த ஒருவரால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முறைப்பாட்டாளர் கொள்வனவு செய்த புதிய மோட்டார் சைக்கிளை கடந்த 8ஆம் திகதி இலக்கத் தகடுகள் இன்றியும், வருமான அனுமதிப்பத்திரம் இன்றியும் செலுத்திய குற்றத்திற்காக சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு இந்த இலஞ்சம் கோரப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதன்போது குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் இலஞ்சமாக 10,000 ரூபாய் பணத்தைக் கோரியுள்ளார்.அவ்வளவு பணத்தை வழங்க முடியாது என முறைப்பாட்டாளர் தெரிவித்த போது, சந்தேகநபர் மதுபானப் போத்தல் ஒன்றைக் கோரியுள்ளார். அதனை வழங்கும் வரை முறைப்பாட்டாளரின் தேசிய அடையாள அட்டைக்கு பதிலாக வழங்கப்பட்டிருந்த கடிதத்தை தன்வசம் வைத்துக்கொண்டு, நேற்று (9) குறித்த மதுபானப் போத்தலை இலஞ்சமாகப் பெற முயன்றுள்ளார்.குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் நேற்று பிற்பகல் 3 மணியளவில் தர்மபுரம் பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள தொலைபேசி விற்பனை நிலையத்திற்கு அருகில் உள்ள மூடியிருந்த கட்டிடமொன்றிற்கு அண்மையில் வைத்து இலஞ்ச ஊழல் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார்.சந்தேகநபர் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

TAGGED:arrestmuthalvanSri Lanka Policetamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

போப் லியோவை விமர்சித்த டிரம்புக்கு ஈரான் அதிபர் கடும் பதில் – சர்ச்சையை ஏற்படுத்திய ஏஐ புகைப்படம்

போப் லியோ, 'நான் டிரம்ப் நிர்வாகத்திற்கோ, உண்மைகளை பேசுவதற்கோ அஞ்சவில்லை. தாக்குதல்களுக்கும் போருக்கும் எதிராக நான்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

பண்டிகைக் காலத்தில் ஆன்லைன் மோசடிகள் அதிகரிக்கும் அபாயம் – இலங்கை கணினி அவசர பிரிவு எச்சரிக்கை
உள்நாடு

பண்டிகைக் காலத்தில் ஆன்லைன் மோசடிகள் அதிகரிக்கும் அபாயம் – இலங்கை கணினி அவசர பிரிவு எச்சரிக்கை

By news team
மீகஸ்வெவாவில் பெண் சிசு உடல் கண்டெடுப்பு – பகுதி முழுவதும் பரபரப்பு
உள்நாடு

மீகஸ்வெவாவில் பெண் சிசு உடல் கண்டெடுப்பு – பகுதி முழுவதும் பரபரப்பு

By news team
மாத்தறை வரல்ல பகுதியில் 7 வயது பாடசாலை மாணவி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
உள்நாடு

மாத்தறை வரல்ல பகுதியில் 7 வயது பாடசாலை மாணவி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

By news team
மின்சாரக் கட்டணத்தில் மீண்டும் உயர்வு வருமா? மேலும் 15% அதிகரிக்க புதிய முன்மொழிவு
உள்நாடு

மின்சாரக் கட்டணத்தில் மீண்டும் உயர்வு வருமா? மேலும் 15% அதிகரிக்க புதிய முன்மொழிவு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?