By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Apr 4, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

தெரியாதவர்களிடம் இருந்து உணவு, பானம் ஏற்க வேண்டாம் – பொலிஸார் எச்சரிக்கை

news team
Last updated: March 25, 2026 11:54 am
By news team
Share
1 Min Read
தெரியாதவர்களிடம் இருந்து உணவு, பானம் ஏற்க வேண்டாம் – பொலிஸார் எச்சரிக்கை
SHARE

மக்கள் தங்களின் பணம் மற்றும் தங்க நகைகளைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு இலங்கை பொலிஸார் எச்சரித்துள்ளனர்.மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலையில், இரண்டு பெண்கள் கடத்தப்பட்டு, மயக்க மருந்து கலந்த பானத்தை வழங்கி அவர்களின் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.இந்தச் சம்பவத்தில் ஒரு பெண் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு பெண் கொலை முயற்சியிலிருந்து தப்பியுள்ளார்.இந்த நிலையிலேயே பொலிஸ் ஊடகப் பிரிவு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.சந்தேகநபர்கள் பொது இடங்கள் அல்லது பொதுப் போக்குவரத்தின் போது மக்களிடம் மிகவும் நெருக்கமாகப் பழகி நம்பிக்கையைப் பெறுவதற்கு முயற்சிப்பதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர்.இதனையடுத்து, போதைப்பொருள் அல்லது மயக்க மருந்து கலந்த டொபி, சொக்லேட், உணவு, பானங்கள் வழங்குவதுடன், விஷ ஸ்ப்ரே (Spray) அல்லது மிளகாய்த் தூள் ஆகியவற்றைப் பயன்படுத்தி சம்பந்தப்பட்டவர்களை செயலிழக்கச் செய்ய முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே, பொது இடங்களில் தெரியாதவர்கள் வழங்கும் வாகன போக்குவரத்து உதவிகளை ஏற்கும் போது கவனமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரித்துள்ளனர்.அத்துடன், பழக்கமில்லாதவர்கள் வழங்கும் எந்தவொரு உணவு அல்லது பானங்களையும் எந்தக்காரணம் கொண்டும் உட்கொள்ள வேண்டாம் என்பதுடன், பணம் மற்றும் நகைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்குமாறும் பொது மக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.இதேவேளை, சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது வாகனங்கள் குறித்து தகவல் தெரிந்தால், உடனடியாக 119 அல்லது 118 என்ற இலக்கத்துக்கு அழைக்குமாறும் பொலிஸ் ஊடகப் பிரிவு வலியுறுத்தியுள்ளது.

TAGGED:muthalvanSri Lanka Police Investigationtamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

நாடளாவிய விசேட சோதனை நடவடிக்கை – 512 பேர் கைது

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்காக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

மத்திய கிழக்கு போர் தாக்கம்: இலங்கைக்கு வரவிருந்த 768 விமானங்கள் ரத்து – சுற்றுலா வருகை 30% வீழ்ச்சி
உள்நாடு

மத்திய கிழக்கு போர் தாக்கம்: இலங்கைக்கு வரவிருந்த 768 விமானங்கள் ரத்து – சுற்றுலா வருகை 30% வீழ்ச்சி

By news team
பண்டத்தரிப்பில் இராணுவம் வெளியேற்றம் – காணி சண்டிலிப்பாய் பிரதேச செயலாளரிடம் ஒப்படைப்பு
உள்நாடு

பண்டத்தரிப்பில் இராணுவம் வெளியேற்றம் – காணி சண்டிலிப்பாய் பிரதேச செயலாளரிடம் ஒப்படைப்பு

By news team
அமரகீர்த்தி அத்துகோரள படுகொலை: 12 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனைக்கு மன்னிப்பு வழங்குமாறு கோரிக்கை
உள்நாடு

அமரகீர்த்தி அத்துகோரள படுகொலை: 12 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனைக்கு மன்னிப்பு வழங்குமாறு கோரிக்கை

By news team
கிவுல் ஓயா திட்டம் சிங்களக் குடியேற்றம் அல்ல – அமைச்சர் இ.சந்திரசேகர் விளக்கம்
உள்நாடு

கிவுல் ஓயா திட்டம் சிங்களக் குடியேற்றம் அல்ல – அமைச்சர் இ.சந்திரசேகர் விளக்கம்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?