By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Aug 21, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

செம்மணி புதைகுழியில் காசு வடிவ தாயத்துடன் மனித என்புக்கூடு மீட்பு; அகழ்வில் புதிய தடயங்கள் கண்டுபிடிப்பு

news team
Last updated: June 2, 2026 11:15 am
By news team
Share
1 Min Read
செம்மணி புதைகுழியில் காசு வடிவ தாயத்துடன் மனித என்புக்கூடு மீட்பு; அகழ்வில் புதிய தடயங்கள் கண்டுபிடிப்பு
SHARE

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் இரண்டாம் பகுதி அகழ்வு பணிகள் நேற்றையதினம் திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், கழுத்தில் காசு வடிவிலான தாயத்துடன் என்பு கூடு ஒன்று அடையாளம் காணப்பட்ட நிலையில் அது அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி ஆரம்பமான நிலையில் , மே மதம் 09ஆம் திகதி சனிக்கிழமை வரையில் 12 நாட்கள் அகழ்வு பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்றன.அந்தவகையில், 09ஆம் திகதியுடன் அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு , இன்றைய தினம் திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.அதன்போது கழுத்து பகுதியில் காசு வடிவிலான தாயத்துடன் ஒரு என்பு கூடு அடையாளம் காணப்பட்ட நிலையில் அது முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.அத்தோடு, புதைகுழி பகுதிக்குள் செத்தல் தேங்காய் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் மேலும் சில என்பு கூடுகள் இனம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றை சுத்தம் செய்து அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமையால் , அவற்றை அடையாளப்படுத்தவில்லை.இந்நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 13 நாட்களில் 22 என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அவை அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.அத்துடன், புதைகுழிக்குள் இருந்து மூக்குத்தி, நாணய குற்றிகள், ஆணிகள், மஞ்சள் நிற வளையல் துண்டு உள்ளடங்கலாக 17 பிற பொருட்கள் மீட்கப்பட்ட நிலையில் இன்றையதினம் காசு வடிவிலான தாயத்து மீட்கப்பட்டுள்ளது.செம்மணி புதைகுழிக்குள் இருந்து இதுவரையிலான கால பகுதியில் 262 மனித என்புகூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவை அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

TAGGED:chemmani mass graves jaffnamuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மொனராகலையில் கோர விபத்து: 5 பேர் உயிரிழப்பு

மொனராகலை, கும்புக்கான பகுதியில் இன்று (21) காலை டிப்பர் லொறியும் டிராக்டரும் மோதிய விபத்தில் 5…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

மரக்கறி லாரியில் மறைத்து கொண்டுவந்த பல கோடி பெறுமதியான போதை மாத்திரைகள் – நபர் கைது
உள்நாடு

மரக்கறி லாரியில் மறைத்து கொண்டுவந்த பல கோடி பெறுமதியான போதை மாத்திரைகள் – நபர் கைது

By news team
பொலிஸ் அதிகாரிகள் போல நடித்து நிதி மோசடி: பொதுமக்களுக்கு CID அவசர எச்சரிக்கை
உள்நாடு

பொலிஸ் அதிகாரிகள் போல நடித்து நிதி மோசடி: பொதுமக்களுக்கு CID அவசர எச்சரிக்கை

By news team
தெமட்டகொடவில் 19 கைத்துப்பாக்கிகளுடன் 4 பேர் கைது; மேலதிக விசாரணைகள் தீவிரம்
உள்நாடு

தெமட்டகொடவில் 19 கைத்துப்பாக்கிகளுடன் 4 பேர் கைது; மேலதிக விசாரணைகள் தீவிரம்

By news team
காலிமுகத்திடல் கடலில் நீரில் மூழ்கிய 11 வயது மாணவன் உயிரிழப்பு
உள்நாடு

காலிமுகத்திடல் கடலில் நீரில் மூழ்கிய 11 வயது மாணவன் உயிரிழப்பு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?