By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Aug 21, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

சட்டவிரோத மதுபான நிலைய சோதனையில் பொலிஸார் மீது 8 நாய்களை ஏவிவிட்ட பெண் கைது

news team
Last updated: June 30, 2026 9:05 am
By news team
Share
1 Min Read
சட்டவிரோத மதுபான நிலைய சோதனையில் பொலிஸார் மீது 8 நாய்களை ஏவிவிட்ட பெண் கைது
SHARE

களுத்துறை, கல்பாத்த பிரதேசத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை நிலையமொன்றை சுற்றிவளைக்க சென்ற பொலிஸ் அதிகாரிகள் மீது பெண்ணொருவரால் எட்டு நாய்கள் ஏவி விடப்பட்டுள்ளது.நாய்களின் தாக்குதலில் அங்குருவாதொட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட நான்கு அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.காயமடைந்தவர்கள் களுத்துறை நாகொட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.8 முதல் 10 அடி உயரமான மதில்களால் சூழப்பட்ட வீட்டுக்குள் சட்டவிரோத மதுபான விற்பனை இடம்பெற்று வந்துள்ளது.நீண்ட காலமாக மது அருந்துபவர்களுக்குத் தேவையான உணவுகளையும் வழங்கி, ஒரு உணவகம் போன்று இந்த சட்டவிரோத மதுபான விற்பனை மிகவும் சூட்சுமமாக முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது.இதற்கு முன்னரும் இரண்டு சந்தர்ப்பங்களில் களுத்துறை பொலிஸின் விசேட பிரிவுகள் இந்த இடத்தை சுற்றிவளைக்க முயற்சித்துள்ளனர்.எனினும் அவை உரிய முறையில் இடம்பெறாததால், களுத்துறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பத்மினி வீரசூரியவின் உத்தரவுக்கமைய, கடந்த 27ஆம் திகதி இந்த சுற்றிவளைப்பை மேற்கொள்ளும் பொறுப்பு அங்குருவாதொட்ட பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.அதற்கைமய, அங்குருவாதொட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் குறித்த வீட்டை சுற்றிவளைத்து, 1000 மில்லி லீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபரைக் கைது செய்தனர்.இதன் போது சந்தேகநபரான மதுபான வியாபாரியின் மனைவி, வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஜெர்மன் ஷெப்பர்ட் மற்றும் ரொட்வைலர் உள்ளிட்ட விலையுயர்ந்த எட்டு பயங்கரமான நாய்களை ஒரே நேரத்தில் திறந்துவிட்டு பொலிஸ் அதிகாரிகளை கடிக்குமாறு ஏவிவிட்டுள்ளார்.இதன்போது பொலிஸார் தம்மை பாதுகாக்கும் நோக்கில் தப்பியோடினர். எனினும் நாயின் பாய்ச்சல் காரணமாக பொலிஸார் காயமடைந்துள்ளனர்.பொலிஸ் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில், மதுபான வியாபாரியையும் அவரது மனைவியையும் பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

TAGGED:arrestmuthalvanSri Lanka Policetamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மொனராகலையில் கோர விபத்து: 5 பேர் உயிரிழப்பு

மொனராகலை, கும்புக்கான பகுதியில் இன்று (21) காலை டிப்பர் லொறியும் டிராக்டரும் மோதிய விபத்தில் 5…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

நாகதீப ரஜமகா விகாரையின் விகாராதிபதியை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சந்திப்பு
உள்நாடு

நாகதீப ரஜமகா விகாரையின் விகாராதிபதியை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சந்திப்பு

By news team
அநுராதபுரத்தில் பெண்களுக்கு மயக்கமருந்து கொடுத்து கொள்ளை சம்பவம் – 17 இலட்சம் மதிப்புள்ள பணம், நகைகள் திருட்டு
உள்நாடு

அநுராதபுரத்தில் பெண்களுக்கு மயக்கமருந்து கொடுத்து கொள்ளை சம்பவம் – 17 இலட்சம் மதிப்புள்ள பணம், நகைகள் திருட்டு

By news team
நாளை முதல் ஒற்றை–இரட்டை இலக்க முறைமைக்கு எதிர்ப்பு – எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் போராட்டம்
உள்நாடு

நாளை முதல் ஒற்றை–இரட்டை இலக்க முறைமைக்கு எதிர்ப்பு – எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் போராட்டம்

By news team
போதைப்பொருள் பாவனையில் பேருந்து ஓட்டிய 4 சாரதிகள் கைது
உள்நாடு

போதைப்பொருள் பாவனையில் பேருந்து ஓட்டிய 4 சாரதிகள் கைது

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?