By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Apr 4, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

கொடிகாமம் பகுதியில் தனியார் பேருந்து தீவைத்து எரிப்பு – இருவர் கைது

news team
Last updated: March 12, 2026 12:12 pm
By news team
Share
1 Min Read
கொடிகாமம் பகுதியில் தனியார் பேருந்து தீவைத்து எரிப்பு – இருவர் கைது
SHARE

யாழ். கொடிகாமம் பகுதியில் தனியார் பேருந்தொன்று தீயிட்டுக் கொளுத்தப்பட்ட சம்பவத்தையடுத்து, சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவரைக் கொடிகாமம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.குறித்த சம்பவம் நேற்று (11.03.2026) அதிகாலை இடம்பெற்றுள்ளது. தனியார் பேருந்து சேவையில் ஈடுபடும் இரு தரப்பினருக்கு இடையே நீண்டகாலமாக நிலவி வந்த தொழில்சார் முரண்பாடே இந்தச் சம்பவத்துக்குக் காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இந்தத் தீவைப்புச் சம்பவத்தில் பேருந்தின் பெரும் பகுதி சேதமடைந்துள்ளது. சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினரால் வழங்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து, துரிதமாகச் செயற்பட்ட கொடிகாமம் பொலிஸார் சந்தேகநபர்களைக் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார், அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

TAGGED:crimefiremuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கிளிநொச்சி தர்மபுரம் விபத்து – இரண்டு இளைஞர்கள் பலி

கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

கெஹெலிய ரம்புக்வெல்லக்கு 75 மில்லியன் அபராதம் – உயர் நீதிமன்றம் தீர்ப்பு
உள்நாடு

கெஹெலிய ரம்புக்வெல்லக்கு 75 மில்லியன் அபராதம் – உயர் நீதிமன்றம் தீர்ப்பு

By news team
சர்வதேச சந்தை தாக்கம்- இலங்கையில் தங்க விலை கணிசமாக உயர்வு
வணிகம்

சர்வதேச சந்தை தாக்கம்- இலங்கையில் தங்க விலை கணிசமாக உயர்வு

By news team
நீர்கொழும்பில் மின்சாரம் தாக்கி 27 வயது இளைஞர் பலி – மின்விசிறி திருத்த முயற்சியில் துயரம்
உள்நாடு

நீர்கொழும்பில் மின்சாரம் தாக்கி 27 வயது இளைஞர் பலி – மின்விசிறி திருத்த முயற்சியில் துயரம்

By news team
கிளிநொச்சியில் புதையல் தோண்ட முயன்ற 4 பேர் கைது
உள்நாடு

கிளிநொச்சியில் புதையல் தோண்ட முயன்ற 4 பேர் கைது

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?