By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Feb 20, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
தொழில்நுட்பம்

ஐபோன் பயனர்களுக்கு அப்பிள் அவசர எச்சரிக்கை: உடனடி மென்பொருள் புதுப்பிப்பு அவசியம்

news team
Last updated: December 30, 2025 11:00 am
By news team
Share
1 Min Read
ஐபோன் பயனர்களுக்கு அப்பிள் அவசர எச்சரிக்கை: உடனடி மென்பொருள் புதுப்பிப்பு அவசியம்
SHARE

அப்பிள் நிறுவனம் தனது ஐபோன் பயனர்களுக்கு அவசர பாதுகாப்பு ஆலோசனையை வழங்கியுள்ளது.சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான மற்றும் அதிநவீனத் தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்பட்டிருப்பதாக அப்பிள் தெரிவித்துள்ளது. சஃபாரி (Safari) மற்றும் iOS-இல் உள்ள பிற இணைய உலாவிகளால் பயன்படுத்தப்படும் ‘WebKit’ எனும் பிரவுசர் என்ஜினில் இந்த குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. ஹேக்கர்கள் உருவாக்கியுள்ள தீங்கிழைக்கும் இணையதளம் ஒன்றை ஒரு பயனர் பார்வையிடுவதன் மூலம், அவரது சாதனத்தில் ஊடுருவித் தரவுகளைத் திருட அல்லது தீங்கிழைக்கும் நிரல்களை இயக்க இக்குறைபாடு வழிவகுக்கும். இந்தத் தாக்குதல்கள் பரவலாக இடம்பெறவில்லை என்றும், குறிப்பிட்ட சில தனிநபர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்டிருப்பதாகவும் அப்பிள் உறுதிப்படுத்தியுள்ளது.எவ்வாறாயினும், பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்தத் தாக்குதல்களுக்குப் பின்னணியில் யார் இருக்கிறார்கள் அல்லது யார் இலக்கு வைக்கப்பட்டார்கள் என்ற விபரங்களை நிறுவனம் வெளியிடவில்லை.உலகளவில் சுமார் 1.8 பில்லியன் ஐபோன் பயனர்கள் இருந்தாலும், தற்போதைய நிலையில் இது ஒரு பாரிய அச்சுறுத்தல் இல்லை என சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.இருப்பினும், இந்த ‘ஸிரோ-டே’ (Zero-day) குறைபாடுகளிலிருந்து தற்காத்துக்கொள்ள பின்வரும் நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரப்பட்டுள்ளது.உங்கள் ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களில் உடனடியாக மென்பொருள் பதிப்பை புதுப்பிக்கவும்.சமீபத்திய பாதுகாப்புத் திருத்தங்களை நிறுவுவதன் மூலம் ஹேக்கர்களின் ஊடுருவலைத் தடுக்க முடியும்.

TAGGED:apple phonemuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மூன்று குழந்தைகளின் தாய் படுகொலை: கணவன் பொலிஸ் நிலையத்தில் சரண்

காலி - நெலுவ, ஹக்பிட்டிய பகுதியில், குடும்ப தகராறு காரணமாக மனைவியின் கழுத்தை அறுத்து கணவன்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

மட்டக்களப்பில் போலி 5,000 ரூபா தாளால் மரக்கறி வியாபாரிக்கு மோசடி
உள்நாடு

மட்டக்களப்பில் போலி 5,000 ரூபா தாளால் மரக்கறி வியாபாரிக்கு மோசடி

By news team
“‘உங்களால்தான் போட்டி சாத்தியமானது’ – பாகிஸ்தான் அமைச்சர் மொஹ்சின் நக்வி, அனுரகுமாருக்கு நன்றி”
உள்நாடு

“‘உங்களால்தான் போட்டி சாத்தியமானது’ – பாகிஸ்தான் அமைச்சர் மொஹ்சின் நக்வி, அனுரகுமாருக்கு நன்றி”

By news team
இலங்கையில் அனைத்து முச்சக்கரவண்டிகளும் செயலி அடிப்படையில் இயங்க வேண்டும்: தேசிய போக்குவரத்து ஆணையம்
உள்நாடு

இலங்கையில் அனைத்து முச்சக்கரவண்டிகளும் செயலி அடிப்படையில் இயங்க வேண்டும்: தேசிய போக்குவரத்து ஆணையம்

By news team
6ஆம் தர கல்விச் சீர்திருத்தங்கள் 2027க்கு ஒத்திவைப்பு – அமைச்சரவை முடிவு
உள்நாடு

6ஆம் தர கல்விச் சீர்திருத்தங்கள் 2027க்கு ஒத்திவைப்பு – அமைச்சரவை முடிவு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?