By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Tuesday, Apr 14, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

“‘உங்களால்தான் போட்டி சாத்தியமானது’ – பாகிஸ்தான் அமைச்சர் மொஹ்சின் நக்வி, அனுரகுமாருக்கு நன்றி”

news team
Last updated: February 16, 2026 8:56 pm
By news team
Share
1 Min Read
“‘உங்களால்தான் போட்டி சாத்தியமானது’ – பாகிஸ்தான் அமைச்சர் மொஹ்சின் நக்வி, அனுரகுமாருக்கு நன்றி”
SHARE

2026 இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி கொழும்பில் சுமுகமாக நடைபெறுவதற்கு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மேற்கொண்ட இராஜதந்திர முன்னெடுப்புகளே காரணம் எனக் கூறி பாகிஸ்தான் அரசு தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளது.இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தானின் உள்துறை மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு அமைச்சர் மொஹ்சின் நக்வி, இன்று (16) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்த போதே இதனைத் தெரிவித்தார்.இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது குறித்து பாகிஸ்தான் தயக்கம் காட்டிய நிலையில், ஜனாதிபதி அனுரகுமார பாகிஸ்தான் பிரதமரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பின்னரே அந்தத் தீர்மானம் மாறியதாக நக்வி தெரிவித்தார்.

“ஜனாதிபதி பேசிவிட்டார், இனி எந்தப் பிரச்சினையும் இல்லை, நாம் விளையாட வேண்டும்” என பாகிஸ்தான் பிரதமர் தன்னிடம் கூறியதாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.”உங்களால் தான் இந்தப் போட்டி சாத்தியமானது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் பங்களாதேஷ் என சுமார் 200 கோடிக்கும் அதிகமான மக்களை இந்தப் போட்டி மகிழ்வித்துள்ளது. நீங்கள்தான் இந்த நிகழ்வின் உண்மையான நாயகன்” என நக்வி ஜனாதிபதியைப் பாராட்டினார்.கிரிக்கெட் விளையாட்டையும் தாண்டி, முதலீடு, சுற்றுலா மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு போன்ற துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயற்படுவது குறித்தும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, பாகிஸ்தான் அணியின் வருகை இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார்.அத்துடன், ‘டிட்வா’ சூறாவளி போன்ற இக்கட்டான காலப்பகுதிகளில் இலங்கை மக்களுக்கு பாகிஸ்தான் வழங்கிய தொடர்ச்சியான ஆதரவிற்கும் அவர் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

TAGGED:anuramuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

போப் லியோவை விமர்சித்த டிரம்புக்கு ஈரான் அதிபர் கடும் பதில் – சர்ச்சையை ஏற்படுத்திய ஏஐ புகைப்படம்

போப் லியோ, 'நான் டிரம்ப் நிர்வாகத்திற்கோ, உண்மைகளை பேசுவதற்கோ அஞ்சவில்லை. தாக்குதல்களுக்கும் போருக்கும் எதிராக நான்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

ஒடிசாவில் 7-ம் வகுப்பு மாணவியை பல முறை பாலியல் துஸ்பிரயோகம் செய்த 5 ஆசிரியர்கள் கைது
இந்தியா

ஒடிசாவில் 7-ம் வகுப்பு மாணவியை பல முறை பாலியல் துஸ்பிரயோகம் செய்த 5 ஆசிரியர்கள் கைது

By news team
கிறிஸ்துமஸ் போர் நிறுத்த கோரிக்கையை ரஷ்யா நிராகரிப்பு – வேதனை தெரிவித்த பாப்பரசர்
உலகம்

கிறிஸ்துமஸ் போர் நிறுத்த கோரிக்கையை ரஷ்யா நிராகரிப்பு – வேதனை தெரிவித்த பாப்பரசர்

By news team
6ஆம் தர கல்விச் சீர்திருத்தங்கள் 2027க்கு ஒத்திவைப்பு – அமைச்சரவை முடிவு
உள்நாடு

6ஆம் தர கல்விச் சீர்திருத்தங்கள் 2027க்கு ஒத்திவைப்பு – அமைச்சரவை முடிவு

By news team
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் கைது செய்யப்பட்டமையானது அரசின் திட்டமிட்ட பழிவாங்கல் நடவடிக்கை - முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில
உள்நாடு

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் கைது செய்யப்பட்டமையானது அரசின் திட்டமிட்ட பழிவாங்கல் நடவடிக்கை – முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?