By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Oct 10, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

மட்டக்களப்பில் போலி 5,000 ரூபா தாளால் மரக்கறி வியாபாரிக்கு மோசடி

news team
Last updated: January 10, 2026 4:23 pm
By news team
Share
1 Min Read
மட்டக்களப்பில் போலி 5,000 ரூபா தாளால் மரக்கறி வியாபாரிக்கு மோசடி
SHARE

மட்டக்களப்பு, பார் வீதியில் மரக்கறி வியாபாரி ஒருவரிடம் போலி 5,000 ரூபா தாளைக் கொடுத்து மோசடி செய்த நபர் ஒருவர் தப்பிச் சென்றுள்ள சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.குறித்த வீதியின் ஓரத்தில் ‘பட்டா’ ரக வாகனத்தில் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தவரே இவ்வாறு மோசடிக்கு ஆளாகியுள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட வியாபாரி கவலையுடன் தெரிவிக்கையில்,

“இன்று காலை ஒருவர் வந்து என்னிடம் மரக்கறி கொள்வனவு செய்தார். மரக்கறியைப் பெற்றுக்கொண்டு 5,000 ரூபா தாளைத் தந்துவிட்டு மிகுதிப் பணத்தையும் பெற்றுக்கொண்டு சென்றுவிட்டார். மரக்கறி வாங்க மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், நான் அந்த நாணயத்தாளைச் சரியாகக் கவனிக்காமல் மற்றைய தாள்களோடு வைத்துவிட்டேன்.அதன் பின்னர் மற்றுமொரு வாடிக்கையாளருக்குப் பணம் கொடுப்பதற்காக அந்தப் பணத்தை எடுத்தபோதே, குறித்த 5,000 ரூபா நாணயத்தாள் சாதாரண கடதாசியில் அச்சிடப்பட்டிருந்த போலி நாணயத்தாள் என்பதை அறிந்தேன்,” என்று தெரிவித்தார்.மேலும், இச்சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் குறித்த வியாபாரி குறிப்பிட்டுள்ளார்.இவ்வாறான மோசடி நபர்கள் போலி நாணயத்தாள்களைப் புழக்கத்தில் விடக்கூடும் என்பதால், பணப் பரிமாற்றங்களின்போது பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

TAGGED:muthalvanSri Lanka Policetamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பாணந்துறையில் தொழிலதிபர் கடத்தல் – மனைவி காயம்

பாணந்துறை மஹாநாம வீதிக்கு அருகிலுள்ள வீதியொன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பிரபல வர்த்தகர் ஒருவர் அடையாளம்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

வெள்ள நிவாரண கொடுப்பனவில் பாரபட்சம் – வவுனியா சூடுவெந்தபுலவு கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்
உள்நாடு

வெள்ள நிவாரண கொடுப்பனவில் பாரபட்சம் – வவுனியா சூடுவெந்தபுலவு கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

By news team
இலங்கையை சூழ்ந்த கடல் வெப்பநிலை 1°C அதிகரிப்பு – நீடிக்கும் வறட்சி குறித்து எச்சரிக்கை
உள்நாடு

இலங்கையை சூழ்ந்த கடல் வெப்பநிலை 1°C அதிகரிப்பு – நீடிக்கும் வறட்சி குறித்து எச்சரிக்கை

By news team
290 வகை உணவுகளைச் சமைத்து மருமகனை பிரமிக்க வைத்த மாமியார்
இந்தியா

290 வகை உணவுகளைச் சமைத்து மருமகனை பிரமிக்க வைத்த மாமியார்

By news team
காதலரை திருமணம் செய்த மகள் “இறந்ததாக” அறிவிப்பு – உருவ பொம்மைக்கு இறுதிச்சடங்கு நடத்திய குடும்பம்
இந்தியா

காதலரை திருமணம் செய்த மகள் “இறந்ததாக” அறிவிப்பு – உருவ பொம்மைக்கு இறுதிச்சடங்கு நடத்திய குடும்பம்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?