By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, May 29, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

எரிபொருள் நெருக்கடியை தவிர்க்க சிக்கனமாக பயன்படுத்துமாறு ஜனாதிபதி கோரிக்கை

news team
Last updated: May 20, 2026 4:13 pm
By news team
Share
1 Min Read
எரிபொருள் நெருக்கடியை தவிர்க்க சிக்கனமாக பயன்படுத்துமாறு ஜனாதிபதி கோரிக்கை
SHARE

நாடு கடந்த காலத்தைப்போல மீண்டும் ஒருபோதும் ஒரு பொருளாதார நெருக்கடி நிலைக்கு தள்ளப்படுவதற்கு இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார்.முழு நாடும் ஒன்றாக எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பில் தற்சமயம் இடம்பெற்று வரும் நிகழ்வில் கலந்து கொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.இலங்கை ரூபாய்க்கு நிகராக அமெரிக்க டொலர் அதிகரித்துள்ளமையினால் எமது பொருளாதாரத்தில் பாரிய தாக்கம் ஏற்பட்டுள்ளது.எமது முக்கிய வருமான வழியாக சுற்றுலாத்துறை காணப்படுகின்றது.கடந்த வருட ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருட ஏப்ரலில் 29 சதவீதம் சுற்றுலாத்துறை வீழ்ச்சியை எதிர்நோக்கியுள்ளது.உலகளாவிய பிரச்சினை காரணமாக நாட்டின் ஏற்றுமதியிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதேபோல் இலங்கையர்களால் வௌிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் பணமும் குறைவடைந்துள்ளது.இவை டொலரின் பற்றாக்குறையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.அதேநேரம், ரூபாவின் இந்த வீழ்ச்சி காரணமாக எரிபொருளுக்கான ஒதுக்கமும் பாரிய அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.எரிபொருள் இறக்குமதிக்காக கடந்த பெப்ரவரி மாதம் 98 மில்லியன் அமெரிக்க டொலர் செலவு ஏற்பட்டிருந்தது.மார்ச் மாதத்தில் எரிபொருள் இறக்குமதிக்கான செலவினம் 216 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்தது.ஏப்ரலில் 368 மில்லியன் அமெரிக்க டொலராகவும், கடந்த மே மாதத்தில் 522 மில்லியன் அமெரிக்க டொலராகவும் அதிகரித்தது.எனவே மாதம் ஒன்றுக்கான எரிபொருள் இறக்குமதி செலவினம் 500 மில்லியன் அமெரிக்க டொலரால் அதிகரித்துள்ளது.இது எமது ரூபாவின் வீழ்ச்சியையும் டொலருக்கான கேள்வியையும் ஏற்படுத்தியுள்ளது.தற்போது சர்வதேச நாணய நிதியத்துடன் நீடிக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் மீளாய்வை முன்னெடுத்து வருகின்றோம்.இதில் அரசாங்கமும் தற்போது யோசனை அதற்கு முன்வைத்துள்ளது. இதனால் குறுகிய காலத்திற்கு எரிபொருள் பயன்பாட்டை மட்டுப்படுத்த வேண்டும்.இறக்குமதி செலவினத்தையும் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்,டொலர் தடுப்பாடு ஏற்படாமல் இருக்க சகல பிரஜைகளும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என கோருவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

TAGGED:muthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கோட்டாபய பதவியேற்ற ஒரே வாரத்தில் பிள்ளையானை பிணையில் எடுக்க திட்டம் வாக்குமூலம் வழங்கிய அசாத் மௌலானா

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்னும் பிள்ளையான் சிறையிலிருந்தபோது, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

இந்தோனேசியாவில் ஒரே நபருக்கு பகலில் மனிதன், இரவில் பல்லி போல முகமாற்றம்
உலகம்

இந்தோனேசியாவில் ஒரே நபருக்கு பகலில் மனிதன், இரவில் பல்லி போல முகமாற்றம்

By news team
கியூஆர் எரிபொருள் முறை நீக்கப்படாது – எரிசக்தி அமைச்சர் அறிவிப்பு
உள்நாடு

கியூஆர் எரிபொருள் முறை நீக்கப்படாது – எரிசக்தி அமைச்சர் அறிவிப்பு

By news team
பிட்டபெத்தர பகுதியில் இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் ஊற்று கண்டுபிடிப்பு – நிமிடத்திற்கு 10,000 லீற்றர்
உள்நாடு

பிட்டபெத்தர பகுதியில் இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் ஊற்று கண்டுபிடிப்பு – நிமிடத்திற்கு 10,000 லீற்றர்

By news team
சட்டவிரோதமாக 4 லிட்டர் பெட்ரோல் வைத்திருந்த நபருக்கு 21 நாள் சிறை தண்டனை
உள்நாடு

சட்டவிரோதமாக 4 லிட்டர் பெட்ரோல் வைத்திருந்த நபருக்கு 21 நாள் சிறை தண்டனை

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?