By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, May 30, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

அட்டன் – டிக்கோயா பகுதியில் அரச வங்கியில் அடகு வைத்த மோதிரம் மாறியதாக குற்றச்சாட்டு

news team
Last updated: March 13, 2026 2:58 pm
By news team
Share
2 Min Read
அடகு வைத்த மோதிரங்களுக்குப் பதிலாக வேறு மோதிரங்கள்! ; நகைகளை மீட்க அரச வங்கிக்குச் சென்றவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி
SHARE

அட்டன் – டிக்கோயா நகரசபைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள அரச வங்கியொன்றில் 2024ஆம் ஆண்டு இரு மோதிரங்களை அடகு வைத்த நபர் அதை மீட்பதற்கு இவ்வருடம் சென்றபோது வேறு மோதிரங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து வங்கி அதிகாரிகளுக்கு அறிவித்ததையடுத்து அவர்களும் இதில் தவறு நடந்துள்ளதை ஏற்றுக்கொண்டுள்ளனர்.எனினும் வேறு நபர்களிடம் மோதிரங்கள் மாறிச் சென்றுள்ளதை அறிந்துகொண்ட வங்கி அதிகாரிகள் அவற்றைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதாகத் தெரியவந்துள்ளது.இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,டிக்கோயா பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் 2024 ஜனவரி 30ஆம் திகதி தனதும் தனது மனைவியினதும் மோதிரங்களை அரச வங்கியொன்றில் அடகுவைத்து பணம் பெற்றுள்ளார்.பின்பு ஒரு வருடம் கழித்து அதற்கான வட்டித்தொகையை கடந்த வருடம் பெப்ரவரி மாதம் செலுத்தியுள்ளார்.

தனது இரு மோதிரங்களையும் மீட்பதற்காக இவ்வருடம் பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி மேற்படி வங்கிக்கு சென்ற அவருக்கு ஒரு வருட வட்டித்தொகையோடு மொத்த கொடுப்பனவை செலுத்திய பின்னர் வங்கி அடகு நகை பெட்டகத்திலிருந்து மோதிரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.மோதிரங்களை அவதானித்த குறித்த நபர் அவை தான் அடகுவைத்த மோதிரங்கள் அல்ல என்பதை உணர்ந்து கொண்டுள்ளார். அது குறித்து வங்கி அதிகாரியிடம் தெரிவித்ததையடுத்து நிலைமையை உணர்ந்துகொண்ட வங்கி முகாமையாளர் ஒரு வாரம் கழித்து வரும்படியும் குறித்த மோதிரங்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.தான் செலுத்திய பணத்தையும் அவர் மீளப்பெற்றுக்கொண்டுள்ளார். எனினும் ஒரு வாரம் கழித்து அவர் சென்றபோதும் அவருக்கு மோதிரங்கள் கிடைக்கவில்லை.தமக்கு இன்னும் காலம் தேவைப்படுவதாக அவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து அவர் அட்டன் பொலிஸ் தலைமை காரியாலயத்துக்கு முறைப்பாடு ஒன்றை செய்வதற்காக சென்றுள்ளார். சம்பவத்தை செவிமடுத்த பொலிஸ் அதிகாரி இது குறித்து வங்கியின் பாதுகாப்பு கமராவை சோதனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்,அவர் முறைப்பாட்டை பதிவு செய்யாமல் இரு நாட்கள் கழித்து மீண்டும் வங்கிக் கிளைக்கு சென்ற போது அவரது மோதிரம் வேறு ஒரு நபருக்கு தவறுதலாக சென்று விட்டதாகவும் அவரை தொடர்பு கொண்டு அதை மீண்டும் கொண்டு வந்து தரும்படி தகவல் அனுப்பியுள்ளதாகவும் வங்கி முகாமையாளர் தெரிவித்ததுடன் மனைவியின் மோதிரம் யாருக்கு சென்றுள்ளது என்பது பற்றி தாம் தேடி வருவதாக பதில் அளித்துள்ளார்.தான் அடகுவைத்த இரண்டு மோதிரங்களின் எடை 5.30 கிராம் என்று கூறும் குறித்த நபர், வங்கி முகாமையாளர் ஒரு மோதிரமே அடகு வைக்கப்பட்டதாக ஒரு கட்டத்தில் கூறியதாகவும் இது தொடர்பில் தான் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும் மோதிரங்கள் கிடைக்காவிட்டாலும் அதன் எடைக்கேற்ப தற்போதைய சந்தை விலைப் பெறுமதியை எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவிக்கின்றார்.அரச வங்கியொன்றில் இவ்வாறான தவறுகள் இடம்பெறுவது குறித்து நகைகளை அடகு வைப்போர் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

TAGGED:muthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கோட்டாபய பதவியேற்ற ஒரே வாரத்தில் பிள்ளையானை பிணையில் எடுக்க திட்டம் வாக்குமூலம் வழங்கிய அசாத் மௌலானா

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்னும் பிள்ளையான் சிறையிலிருந்தபோது, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

2026ல் 19 நாட்கள் இலங்கை முழுவதும் மதுபான விற்பனை தடை – மதுவரித் திணைக்களம் கடும் எச்சரிக்கை
உள்நாடு

2026ல் 19 நாட்கள் இலங்கை முழுவதும் மதுபான விற்பனை தடை – மதுவரித் திணைக்களம் கடும் எச்சரிக்கை

By news team
யாழ் நகரில் கோர விபத்து: அறுவர் வைத்தியசாலையில் அனுமதி
உள்நாடு

யாழ் நகரில் கோர விபத்து: அறுவர் வைத்தியசாலையில் அனுமதி

By news team
எரிபொருள் QR குறியீட்டு முறை தொடரும் – பிரதி அமைச்சர் அனில் ஜயந்த அறிவிப்பு
உள்நாடு

எரிபொருள் QR குறியீட்டு முறை தொடரும் – பிரதி அமைச்சர் அனில் ஜயந்த அறிவிப்பு

By news team
சர்வதேச சந்தையில் தங்கம் சரிவு – இலங்கையில் 10,000 ரூபாய் வீழ்ச்சி
உள்நாடு

சர்வதேச சந்தையில் தங்கம் சரிவு – இலங்கையில் 10,000 ரூபாய் வீழ்ச்சி

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?