கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகல்

5 months ago

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். 

நாளைமறுதினம் புதன்கிழமை (ஜனவரி 8) கனடாவை ஆளும் லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடவிருந்த நிலையில், ட்ரூடோ தனது பதவி விலகல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கனடாவின் ஒட்டாவா நகரில் உள்ள தனது வீட்டில் அவர் ஊடகவியலாளர்களை சந்தித்தார். "

2015-ஆம் ஆண்டில் பிரதமரான கணம் முதலே கனடாவுக்காகவும் கனேடிய மக்களுக்காகவும் பாடுபட்டு வந்துள்ளேன். நடுத்தர மக்களின் மேம்பாட்டிற்காக உழைத்துள்ளேன். கொரோனா தொற்று காலத்தில் மக்கள் ஒருவருக்கு ஒருவர் தோள் கொடுத்ததை கண்ணுற்றேன். வட அமெரிக்க கண்டத்தில் தடையில்லா வர்த்தகம் நீடிக்க உழைத்தேன்" என்று அவர் தெரிவித்தார்.

எனது கடந்த கால செயல்பாடுகளை விவரித்த பின்னர் அவர் தனது பதவியை விலகல் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். கட்யின் தலைவர் மற்றும் பிரதமர் பதவியில் இருந்து விலக விரும்புவதாக அறிவித்த அவர், அடுத்த தலைவர் தேர்வு செய்யப்படும் வரை தற்போதைய பதவியில் நீடிப்பேன் என்றார்.

குடும்பத்துடன் நடத்திய நீண்ட ஆலோசனைக்குப் பின்னர் பதவி விலகும் முடிவுக்கு வந்ததாக அவர் கூறினார். 

தனது வெற்றிக்கு அவர்களது ஆதரவே காரணம் என்று அவர் கூறினார். தனது பதவி விலகல் முடிவு குறித்து நேற்றைய இரவு உணவின் போது குழந்தைகளிடம் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார்.