By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Oct 10, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

பாடசாலை நேரம் மாற்றப்படுகிறதா? மூடப்படும் பாடசாலைகள் குறித்து கல்வி அமைச்சு விளக்கம்

news team
Last updated: September 29, 2026 6:10 pm
By news team
Share
2 Min Read
பாடசாலை நேரம் மாற்றப்படுகிறதா? மூடப்படும் பாடசாலைகள் குறித்து கல்வி அமைச்சு விளக்கம்
SHARE

நாட்டில் எந்தவொரு அரச பாடசாலையையும் தன்னிச்சையாக மூடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.மாணவர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வரும் பாடசாலைகள் தொடர்பில் மாத்திரமே அறிவியல் பூர்வமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், பாடசாலைகளை மூடுதல், கல்வி மறுசீரமைப்பு மற்றும் பாடசாலை நேர மாற்றம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.எந்தவொரு பாடசாலையையும் உடனடியாக மூடும் திட்டம் அரசாங்கத்திடம் இல்லை எனத் தெரிவித்த அவர், கடந்த பல வருடங்களாக மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாகக் குறைந்து வரும் பாடசாலைகள் தொடர்பிலேயே கவனம் செலுத்தப்படுவதாகவும் கூறினார்.

60 அல்லது 70 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட சில பாடசாலைகளின் அமைவிடங்களும், தற்போதைய மக்கள் தொகைப் பரம்பலும் முற்றிலும் மாறுபட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ள பாடசாலைகள் தொடர்பில் கோட்ட மற்றும் வலய மட்டங்களில் அறிக்கைகள் கோரப்பட்டு, அவற்றின் அடிப்படையில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.பாடசாலைகளை வெறுமனே திறந்து வைத்திருப்பதைவிட, நாட்டிலுள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான மற்றும் போதுமான வசதிகளுடன் கூடிய கல்வியை உறுதி செய்வதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் என நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.இதனிடையே, கல்வி அமைப்பில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வாக 3,000 புதிய ஆசிரியர்களை மிக விரைவில் கல்வி சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.இதன் மூலம் ஆசிரியர் பற்றாக்குறைக்கு கணிசமான தீர்வு கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.கல்வி மறுசீரமைப்பு என்பது பாடத்திட்டங்களை மாற்றுவதுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்படாது எனவும் அமைச்சர் விளக்கமளித்தார்.பாடசாலைகளுக்குத் தேவையான பௌதிக மற்றும் மனித வளங்களை வழங்குதல், கல்வி நிர்வாகக் கட்டமைப்பில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளுதல் மற்றும் மதிப்பீட்டு முறைகளை நவீனமயமாக்குதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களையும் கல்வி மறுசீரமைப்பு உள்ளடக்கும் என அவர் தெரிவித்தார்.இதற்கமைய, 2027ஆம் ஆண்டளவில் 1, 2 மற்றும் 6ஆம் தரங்களுக்கான புதிய பாடத்திட்ட மறுசீரமைப்புகள் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் நளிந்த ஜயதிஸ்ஸ கூறினார்.அதேவேளை, பாடசாலைகள் ஆரம்பிக்கும் மற்றும் முடிவடையும் நேரத்தை மாற்றுவது தொடர்பில் கல்வி அமைச்சினால் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கைகள் குறித்து இதுவரை எந்தவொரு கலந்துரையாடலும் இடம்பெறவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.எதிர்காலத்தில் இது தொடர்பில் கல்வி அமைச்சு ஏதேனும் தீர்மானத்தை எடுத்தால், அது முறைப்படி அறிவிக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பாணந்துறையில் தொழிலதிபர் கடத்தல் – மனைவி காயம்

பாணந்துறை மஹாநாம வீதிக்கு அருகிலுள்ள வீதியொன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பிரபல வர்த்தகர் ஒருவர் அடையாளம்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

IDH மருத்துவமனையில் உயிரிழந்த தாய் மரணம் – தரமற்ற மருந்துகளே காரணம் என கணவர் குற்றச்சாட்டு
உள்நாடு

IDH மருத்துவமனையில் உயிரிழந்த தாய் மரணம் – தரமற்ற மருந்துகளே காரணம் என கணவர் குற்றச்சாட்டு

By news team
தாயின் தகாத உறவுக்கு இடையூறு கராணமாக தாக்குதலில் உயிரிழந்த 2 வயது சிறுமி
உள்நாடு

தாயின் தகாத உறவுக்கு இடையூறு கராணமாக தாக்குதலில் உயிரிழந்த 2 வயது சிறுமி

By news team
இலங்கையில் சிமெந்து விலை உயர்வு – மூட்டைக்கு ரூ.175 வரை அதிகரிப்பு
உள்நாடு

இலங்கையில் சிமெந்து விலை உயர்வு – மூட்டைக்கு ரூ.175 வரை அதிகரிப்பு

By news team
ஏப்ரல் மாதத்தில் நாட்டில் எரிபொருள் விநியோகத்தில் எவ்விதத் தடைகளும் ஏற்படாது - பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவிப்பு
உள்நாடு

ஏப்ரல் மாதத்தில் நாட்டில் எரிபொருள் விநியோகத்தில் எவ்விதத் தடைகளும் ஏற்படாது – பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவிப்பு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?