கல்கமுவ, கொஹொபன்குளம் பகுதியில் இறந்துவிட்டதாக பொலிஸாரால் உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்ட நபர் ஒருவர், அவருக்கான இறுதிச்சடங்கு ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில் உயிருடன் வீட்டிற்கு வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கல்கமுவ, கொஹொபன்குளம் பகுதியைச் சேர்ந்த டி. எம். கீர்த்திசேன என்பவரே இவ்வாறு உயிருடன் வீடு திரும்பியுள்ளார்.வாரியப்பொல சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கீர்த்திசேன சிறைச்சாலைக்குள் உயிரிழந்துவிட்டதாக நான்னேரிய பொலிஸார் அவரது உறவினர்களுக்கு அறிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்களும் கிராம மக்களும் இணைந்து இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகளை ஆரம்பித்துள்ளனர்.கிராமத்தில் துயரப் பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டதுடன், இறுதிச்சடங்கு வீட்டிற்கான பந்தல் அமைத்தல் மற்றும் தகனக் கிரியைகளுக்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன.இந்த நிலையில், தனக்காகவே தயாராகிக் கொண்டிருந்த இறுதிச்சடங்கு வீட்டிற்கு கீர்த்திசேன உயிருடன் நடந்து வந்துள்ளார்.இதனால் உறவினர்களும் கிராம மக்களும் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்ந்துள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் மற்றும் பொலிஸ் விளக்கம் வெளியாக வேண்டியுள்ளது.
