By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Aug 21, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் பயங்கர மோதல் – 26 பேர் உயிரிழந்ததாக உத்தியோகபூர்வ அறிவிப்பு

news team
Last updated: July 7, 2026 1:00 pm
By news team
Share
2 Min Read
நீர்கொழும்பு சிறைச்சாலையில் பயங்கர மோதல் – 26 பேர் உயிரிழந்ததாக உத்தியோகபூர்வ அறிவிப்பு
SHARE

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் 19 கைதிகள் மற்றும் 7 சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்துள்ளதாக நீதி அமைச்சர் நாடாளுமன்றதத்தில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.திட்டமிட்ட போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றக் குழுக்களுக்கு இடையிலான மோதலே இதற்கு காரணம் எனத் தெரிவித்துள்ள அமைச்சர், உண்மை நிலையை கண்டறிய விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.இந்த மோதல்களில் கைதிகள் மற்றும் அதிகாரிகள் உயிரிழந்துள்ளதுடன், பெருமளவிலானோர் காயமடைந்துள்ளதாக அவர் கவலை வெளியிட்டுள்ளார்.நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல்கள் மற்றும் வன்முறைகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று விசேட உரையொன்றை ஆற்றிய நீதி அமைச்சர்,இந்தச் சம்பவத்தில் 7 சிறைச்சாலை அதிகாரிகளும் 19 கைதிகளும் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தினார். அத்துடன், 23 சிறைச்சாலை அதிகாரிகளும் 54 கைதிகளும் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் நாடாளுமன்றத்திற்குத் தெரிவித்தார்.உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த அமைச்சர், இச்சம்பவத்தின் பின்னணியில் போதைப்பொருள் கடத்தல் காரர்கள் மற்றும் திட்டமிட்ட குற்றக் குழுக்களின் சதி உள்ளதாகக் குற்றம் சாட்டினார்.சிறைச்சாலை நிர்வாகத்திற்கு இரகசியத் தகவல்களை வழங்கிய கைதிகளை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தில் மேலும் கருத்து தெரிவித்த நீதி அமைச்சர்

“இது ஒரு பாரதூரமான மனிதப் பேரவலம். சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோதப் பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்காக நாம் கடுமையான சட்டங்களை அமுல்படுத்தியிருந்தோம்.நிர்வாகத்திற்குத் தகவல் வழங்கிய கைதிகளே முதலில் தாக்கப்பட்டனர். இந்த வன்முறையின் போது, திட்டமிட்ட முறையில் மில்லியன் கணக்கான மதிப்புள்ள அதிநவீன உடல் ஸ்கேனர்கள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.சிறைச்சாலை பாதுகாப்பு கட்டமைப்பை அடியோடு முடக்குவதே இவர்களின் நோக்கமாக இருந்துள்ளது.”இச்சம்பவம் குறித்து முழுமையான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி பிரியந்த பெர்ணாண்டோ , ஜனாதிபதி சட்டத்தரணி மொஹான் வீரகோன் மற்றும் மிலிந்த குணதிலக்க ஆகியோரை உள்ளடக்கிய விசேட அமைச்சரவைக் குழுவொன்று ஜனாதிபதி செயலாளரினால் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.மேலும், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மற்றும் சிறைச்சாலைத் திணைக்களம் ஆகியன தனித்தனியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் ஏனைய சிறைச்சாலைகளில் ஏற்படுவதைத் தடுப்பதற்கான அவசரக் கலந்துரையாடல் ஒன்றிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

TAGGED:muthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மொனராகலையில் கோர விபத்து: 5 பேர் உயிரிழப்பு

மொனராகலை, கும்புக்கான பகுதியில் இன்று (21) காலை டிப்பர் லொறியும் டிராக்டரும் மோதிய விபத்தில் 5…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

லெபனான் போர்நிறுத்தத்தில் இல்லை என்ற அமெரிக்க அறிவிப்புக்கு ஈரான் கடும் கண்டனம் – ஒப்பந்தத்திலிருந்து விலகும் எச்சரிக்கை
உள்நாடு

லெபனான் போர்நிறுத்தத்தில் இல்லை என்ற அமெரிக்க அறிவிப்புக்கு ஈரான் கடும் கண்டனம் – ஒப்பந்தத்திலிருந்து விலகும் எச்சரிக்கை

By news team
ஒற்றை இலக்க வாகனத்திற்கு எரிபொருள் மறுப்பு: ஊழியரை அறைந்த சாரதி
உள்நாடு

ஒற்றை இலக்க வாகனத்திற்கு எரிபொருள் மறுப்பு: ஊழியரை அறைந்த சாரதி

By news team
வவுனியாவில் ரூ.1 கோடி மதிப்புள்ள 21.6 கிலோ கேரள கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது, இருவர் தப்பினர்
உள்நாடு

வவுனியாவில் ரூ.1 கோடி மதிப்புள்ள 21.6 கிலோ கேரள கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது, இருவர் தப்பினர்

By news team
புத்தளம்–கொழும்பு பிரதான வீதியில் கோர விபத்து: 3 பேர் உயிரிழப்பு
உள்நாடு

புத்தளம்–கொழும்பு பிரதான வீதியில் கோர விபத்து: 3 பேர் உயிரிழப்பு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?