By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Aug 21, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உலகம்

1,454 அடி உயர எம்பயர் ஸ்டேட் கோபுரத்தில் காதல் முன்மொழிவு செய்த சாகச ஜோடி கைது

news team
Last updated: July 2, 2026 8:26 am
By news team
Share
1 Min Read
1,454 அடி உயர எம்பயர் ஸ்டேட் கோபுரத்தில் காதல் முன்மொழிவு செய்த சாகச ஜோடி கைது
SHARE

நியூயோர்க் நகரிலுள்ள எம்பயர் அரச கட்டிடத்தின் உயரமான கோபுர உச்சியின் மேல் ஆபத்தான முறையில் ஏறி, திருமண முன்மொழிவை செய்ததாகக் கூறப்படும் இளம் ஜோடியினரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ரஷ்யாவை பூர்வீகமாகக் கொண்ட சாகசங்களில் ஈடுபடும் எஞ்சலா நிகோலாவ் (Angela Nikolau) மற்றும் வான்யா பீர்கஸ் (Vanya Beerkus) ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.கருப்பு நிற ஆடைகளை அணிந்தபடி சுமார் 1,454 அடி உயரத்திலான தொலைத்தொடர்பு கோபுரத்தின் உச்சிக்கு சென்றிருந்தனர்.இந்த சாகசப் பயணத்தை சமூக ஊடகங்களிலும் நேரலையாகப் பதிவு செய்தனர்.அதிகாரத்தின் மீதான காதலை விட காதலின் அதிகாரம், மேலோங்கும்போது உலகம் அமைதியை அறியும்’ என்ற வாசகம் எழுதப்பட்ட கொடியொன்றையும் பறக்க விட்டிருந்தனர்.கயிறுகள் அல்லது பிற பாதுகாப்பு உபகரணங்கள் ஏதுமின்றி உயரமான கட்டிடங்கள் மீது ஏறும் இதுபோன்ற ஆபத்தான சாகசங்களைச் அவர்கள் இதற்கு முன்னரும் செய்துள்ளனர்.முன்னதாக, மலேசியாவின் 2,227 அடி உயரமுள்ள மெர்டேகா 118 கோபுரத்தின் மீது ஏறியது குறித்த ஆவணப்படம் ஒன்றிலும் இவர்கள் இடம் பெற்றிருந்தனர்.இந்த ஜோடி எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உள்ளூர் நிலையங்களுக்கு வானொலி மற்றும் தொலைக்காட்சி அலைவரிசைகளை வழங்கும் ஒளிபரப்புக் கோபுரத்தின் உச்சி வரை சென்றதால், அவர்களது பாதுகாப்பு கருதி அதன் சேவை செயலிழக்கச் செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.இந்தக் கோபுரம் மின்சார விநியோகத்துடன் இயங்கிக் கொண்டிருக்கும் போது அதன் மேல் ஏறுவது குறிப்பிட்ட சில அபாயங்களை ஏற்படுத்துகிறது.இதனால் அவர்கள் அலைகளின் தாக்கத்திற்கு உள்ளாகும் அபாயம் இருந்ததால், எம்பயர் ஸ்டேட் கட்டிடம் அதன் அலைவாங்கியை தற்காலிகமாக செயலிழக்கச் செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.கைதானவர்கள் மீது முறையற்ற அத்துமீறல், கவனக்குறைவாக ஆபத்தை விளைவித்தல், ஒழுங்கீனமான நடத்தை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

TAGGED:muthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மொனராகலையில் கோர விபத்து: 5 பேர் உயிரிழப்பு

மொனராகலை, கும்புக்கான பகுதியில் இன்று (21) காலை டிப்பர் லொறியும் டிராக்டரும் மோதிய விபத்தில் 5…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

இன்றைய வானிலை அறிக்கை
உள்நாடு

இன்றைய வானிலை அறிக்கை

By news team
ரூ.6 இலட்சம் பெறுமதியான அலங்கார மலர்ச் செடிகளுடன் இலங்கை பயணி கைது
உள்நாடு

ரூ.6 இலட்சம் பெறுமதியான அலங்கார மலர்ச் செடிகளுடன் இலங்கை பயணி கைது

By news team
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய இந்திய மீனவர்கள் கைது – படகும் பறிமுதல்
உள்நாடு

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய இந்திய மீனவர்கள் கைது – படகும் பறிமுதல்

By news team
இலங்கையில் டெங்கு பாதிப்பு 50,000-ஐ கடந்தது – 30 பேர் உயிரிழப்பு
உள்நாடு

இலங்கையில் டெங்கு பாதிப்பு 50,000 கடந்தது – 30 பேர் உயிரிழப்பு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?