By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, May 30, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

இந்தியாவின் சீனி ஏற்றுமதிக்கு தடை – சந்தையில் சீனி விலையும் உயர்வு

news team
Last updated: May 19, 2026 2:05 pm
By news team
Share
1 Min Read
இந்தியாவின் சீனி ஏற்றுமதிக்கு தடை - சந்தையில் சீனி விலையும் உயர்வு
SHARE

இந்தியா சீனி ஏற்றுமதியை நிறுத்துவதற்கு எடுத்துள்ள தீர்மானம் காரணமாக, ஏனைய நாடுகளிலிருந்து சீனியை இறக்குமதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பிரேசில், தாய்லாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து சீனியை இறக்குமதி செய்வது குறித்து தற்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.கடந்த 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் சீனி ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்துவதற்கு இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது.இந்த ஏற்றுமதித் தடையானது எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி வரை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இலங்கைக்கு அதிகளவில் சீனி இந்தியாவிலிருந்தே இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், இந்தத் தடையின் காரணமாக மாற்று நாடுகளிலிருந்து சீனியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை இலங்கைக்கு ஏற்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இருப்பினும், தற்போது நாட்டிற்குள் போதுமான அளவு சீனி கையிருப்பு உள்ளதுடன், புதிய இருப்புகளை விரைவாக இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதால் சந்தையில் சீனிக்கு தட்டுப்பாடு எதுவும் ஏற்படாது என அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.ரூபாவிற்கு நிகரான டொலரின் மதிப்பு உயர்வடைந்ததன் காரணமாக தற்போது சந்தையில் சீனி விலையில் சற்று அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதுடன், அது இந்தியா சீனி ஏற்றுமதியை நிறுத்தியதால் ஏற்பட்ட ஒன்றல்ல என்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

TAGGED:muthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கோட்டாபய பதவியேற்ற ஒரே வாரத்தில் பிள்ளையானை பிணையில் எடுக்க திட்டம் வாக்குமூலம் வழங்கிய அசாத் மௌலானா

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்னும் பிள்ளையான் சிறையிலிருந்தபோது, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

தாய்லாந்திலிருந்து போதைப்பொருள் கடத்திய 22 தேரர்களும் நீதிமன்றம் விளக்கமறியல் உத்தரவு
உள்நாடு

தாய்லாந்திலிருந்து போதைப்பொருள் கடத்திய 22 தேரர்களும் நீதிமன்றம் விளக்கமறியல் உத்தரவு

By news team
இளம்பெண் உயிரிழப்பு சம்பவம்: காதலன் தலைமறைவு, விசாரணை தீவிரம்
உள்நாடு

இளம்பெண் உயிரிழப்பு சம்பவம்: காதலன் தலைமறைவு, விசாரணை தீவிரம்

By news team
50 கோடி ரூபா மதிப்பிலான ஐஸ், ஹெரோயின் பறிமுதல் – பெண் உட்பட 4 பேர் கைது
உள்நாடு

50 கோடி ரூபா மதிப்பிலான ஐஸ், ஹெரோயின் பறிமுதல் – பெண் உட்பட 4 பேர் கைது

By news team
கந்தளாயில் கால்வாயில் மூழ்கி 16 வயது மாணவன் உயிரிழப்பு
உள்நாடு

கந்தளாயில் கால்வாயில் மூழ்கி 16 வயது மாணவன் உயிரிழப்பு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?