By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, May 30, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

அவிசாவளையில் 180 மி.மீ. மழை பதிவு: பல ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு

news team
Last updated: May 15, 2026 10:12 am
By news team
Share
1 Min Read
அவிசாவளையில் 180 மி.மீ. மழை பதிவு: பல ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு
SHARE

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, இன்று (15) முற்பகல் 5 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சி அவிசாவளை பகுதியில் பதிவாகியுள்ளது.குறித்த காலப்பகுதியில் அங்கு 180 மி.மீ அளவில் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனப் பணிப்பாளர் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.அதேநேரம் ஹங்வெல்ல பகுதியில் 158 மில்லிமீற்றர் அளவிலும், தெரணியகலை பகுதியில் 122 மி.மீ. அளவிலும் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.இதேவேளை நேற்று இரவு முதல் களனி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்த போதிலும், அது இதுவரை எச்சரிக்கை மட்டத்தை அடையவில்லை என அவர் கூறினார்.அதேபோல், அத்தனகலு ஓயாவின் தூனமலே அளவீட்டு நிலையப் பகுதியிலும் அதனைச் சூழவுள்ள இடங்களிலும் 176 மி.மீ. மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.நேற்று கிரியுல்ல பகுதியில் பதிவான 172 மி.மீ. மழைவீழ்ச்சி காரணமாக மா ஓயாவின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது.இதன்படி கிரியுல்ல மற்றும் பாதல்ஹம பகுதிகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ள போதிலும், அது இதுவரை வெள்ளப் பெருக்கு நிலையை அடையவில்லை என கூறினார்.மேலும், கிங் கங்கை, நில்வலா கங்கை மற்றும் களுகங்கை ஆகிய பகுதிகளுக்கு இடைப்பட்ட பகுதிகளில் 50 மி.மீ. முதல் 100 மி.மீ. வரையிலான மழைவீழ்ச்சி கிடைத்துள்ளதாக சூரியபண்டார தெரிவித்தார்.ஒட்டுமொத்தமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளதால், பல ஆற்றுப் பள்ளத்தாக்குகளின் நீர்மட்டங்கள் கணிசமாக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்றும் ஈரவலயப் பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதால், ஆறுகளை அண்டிய மற்றும் தாழ்நிலப்பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமென எல்.எஸ். சூரியபண்டார அறிவுறுத்தினார்.

TAGGED:muthalvantamilnewsweatherweather update
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கோட்டாபய பதவியேற்ற ஒரே வாரத்தில் பிள்ளையானை பிணையில் எடுக்க திட்டம் வாக்குமூலம் வழங்கிய அசாத் மௌலானா

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்னும் பிள்ளையான் சிறையிலிருந்தபோது, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

கர்நாடக மாநிலத்தில் செல்போன், டி.வி.க்கு இரவில் 2 மணி நேரம் தடை விதித்த கிராமம்
இந்தியா

கர்நாடக மாநிலத்தில் செல்போன், டி.வி.க்கு இரவில் 2 மணி நேரம் தடை விதித்த கிராமம்

By news team
QR மற்றும் ஒற்றை-இரட்டை முறை நீக்க வாய்ப்பு – அமைச்சர் விஜித ஹேரத்
உள்நாடு

QR மற்றும் ஒற்றை-இரட்டை முறை நீக்க வாய்ப்பு – அமைச்சர் விஜித ஹேரத்

By news team
நீண்ட காலக் கட்டுப்பாடு நீக்கம் – Gmail மின்னஞ்சல் பெயரை மாற்றும் வசதி அறிமுகம்
தொழில்நுட்பம்

நீண்ட காலக் கட்டுப்பாடு நீக்கம் – Gmail மின்னஞ்சல் பெயரை மாற்றும் வசதி அறிமுகம்

By news team
குளியாப்பிட்டி பகுதியில் பாம்பு கடித்ததால் பார்வை இழந்த O/L பரீட்சை மாணவன்
உள்நாடு

குளியாப்பிட்டி பகுதியில் பாம்பு கடித்ததால் பார்வை இழந்த O/L பரீட்சை மாணவன்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?