By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Aug 21, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

மட்டக்களப்பில் மகளிடம் ஆபாசமாக பேசியதாக 60 வயது தந்தை கைது

news team
Last updated: June 2, 2026 7:21 am
By news team
Share
1 Min Read
மட்டக்களப்பில் மகளிடம் ஆபாசமாக பேசியதாக 60 வயது தந்தை கைது
SHARE

மட்டக்களப்பு மாவட்டத்தில் தனது 24 வயது மகளிடம் ஆபாச வார்த்தைகளால் பேசி வந்த 60 வயதுடைய தந்தையாரை பாலியல் கொடுமை சட்டத்தின் கீழ் சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.குறித்த கைது நடவடிக்கையானது, நேற்று திங்கட்கிழமை (01) இரவு மட்டக்களப்பு காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.தனது தந்தையார் தொடர்ச்சியாக ஆபாசமாக பேசி வருவதாக பாதிக்கப்பட்ட யுவதி காவல்துறை மா அதிபருக்கு இணையத்தளம் ஊடாக முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.இதையடுத்து காவல்துறை மா அதிபர் காரியாலயத்தில் இருந்து குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் காவல்துறையினர் மதுபான விற்பனை நிலையம் ஒன்றில் கடமையாற்றி வந்த குறித்த 60 வயதுடைய தந்தையாரை காவல்நிலையத்திற்கு சம்பவ தினமான நேற்று இரவு வரவழைத்து கைது செய்தனர்.பாதிக்கப்பட்ட யுவதியின் தந்தையார் தொடர்ச்சியாக ஆபாசமாக பேசி வருவதால் அவருடன் இருக்க முடியாது என முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.இந்த நிலையில், கைது செய்யப்பட்டவரின் கையடக்க தொலைபேசியை பரிசித்த போது அவர் ஆபாச படங்கள் வீடியோக்களை அதிகமாக தரை இறக்கம் செய்து வைத்திருந்துள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.இதையடுத்து கைது செய்தவரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

TAGGED:muthalvanSexual harassmenttamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மொனராகலையில் கோர விபத்து: 5 பேர் உயிரிழப்பு

மொனராகலை, கும்புக்கான பகுதியில் இன்று (21) காலை டிப்பர் லொறியும் டிராக்டரும் மோதிய விபத்தில் 5…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

30 ஆண்டு சட்டப் போராட்டத்தில் தாய்க்கு வெற்றி; மகனின் மேல்முறையீடு தள்ளுபடி
உள்நாடு

30 ஆண்டு சட்டப் போராட்டத்தில் தாய்க்கு வெற்றி; மகனின் மேல்முறையீடு தள்ளுபடி

By news team
ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% வரி – ட்ரம்ப் அதிரடி உத்தரவு
உலகம்

ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% வரி – ட்ரம்ப் அதிரடி உத்தரவு

By news team
இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகும் சனத்
விளையாட்டு

இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகும் சனத்

By news team
இலங்கைக்கு வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கை இன்று சந்திப்பு
உள்நாடு

இலங்கைக்கு வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கை இன்று சந்திப்பு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?