By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, May 30, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

அரசாங்க ஊழல்களை வெளிப்படுத்தியதால் நெருக்கடிக்கு உள்ளாகிறேன் – கம்மன்பில குற்றச்சாட்டு

news team
Last updated: May 12, 2026 10:52 am
By news team
Share
1 Min Read
அரசாங்க ஊழல்களை வெளிப்படுத்தியதால் நெருக்கடிக்கு உள்ளாகிறேன் – கம்மன்பில குற்றச்சாட்டு
SHARE

அரசாங்கத்தின் ஊழல் மோசடிகளை வெளிப்படுத்துவதால் திட்டமிட்ட வகையில் நெருக்கடிக்குள்ளாகியுள்ளேன். வாக்குமூலமளிக்க ஒவ்வொரு பொலிஸ் நிலையங்களுக்கும் அழைக்கப்படுகிறேன் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.பொலிஸ் தலைமையகத்தில் நேற்று விசாரணைகளுக்காக முன்னிலையானதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்று நாட்களின் பின்னர் அரசாங்கம் மிகவும் பலவீனமான முறையில் செயற்படும் என்று நான் குறிப்பிட்டேன். ஆரம்பத்தில் நான் மட்டும் தான் அரசாங்கத்தின் குறைகளை சுட்டிக்காட்டினேன். ஆனால் இன்று முழு நாடும் குற்றச்சாட்டுக்களை சுமத்துகிறது.அரசாங்கத்தின் ஊழல் மோசடிகளை வெளிப்படுத்துவதால் திட்டமிட்ட வகையில் நெருக்கடிக்குள்ளாகியுள்ளேன். வாக்குமூலமளிக்க ஒவ்வொரு பொலிஸ் நிலையங்களுக்கும் அழைக்கப்படுகிறேன்.ஊழல் மோசடிகள் பற்றி பொலிஸாருக்கும், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கும் நாங்கள் தகவல் வழங்க வேண்டிய நிலைமை காணப்படுகிறது.அரசாங்கத்தின் அனுசரணையுடன் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு தரப்பு ஊடாக எமக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது. அச்சுறுத்தல்களுக்கு ஒருபோதும் அடிபணியப்போவதில்லை. அரசாங்கத்தின் ஊழல் மோசடிகளை தொடர்ச்சியாக வெளிப்படுத்துவேன் என தெரிவித்தார்.

TAGGED:muthalvanSri Lanka Policetamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கோட்டாபய பதவியேற்ற ஒரே வாரத்தில் பிள்ளையானை பிணையில் எடுக்க திட்டம் வாக்குமூலம் வழங்கிய அசாத் மௌலானா

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்னும் பிள்ளையான் சிறையிலிருந்தபோது, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

சட்டவிரோத எரிபொருள் வைத்தல், விற்பனை, கடத்தல்: மூவர் கைது
உள்நாடு

சட்டவிரோத எரிபொருள் வைத்தல், விற்பனை, கடத்தல்: மூவர் கைது

By news team
அவிசாவளையில் 180 மி.மீ. மழை பதிவு: பல ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு
உள்நாடு

அவிசாவளையில் 180 மி.மீ. மழை பதிவு: பல ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு

By news team
ஜெர்மன் சுற்றுலா பயணியிடம் பாலியல் துன்புறுத்தல்: பதுளையில் முச்சக்கர சாரதி கைது
உள்நாடு

ஜெர்மன் சுற்றுலா பயணியிடம் பாலியல் துன்புறுத்தல்: பதுளையில் முச்சக்கர சாரதி கைது

By news team
யாழில் சிறுமிக்கு பாலியல் தொல்லை குற்றச்சாட்டு – பௌத்த பிக்கு விளக்கமறியலில்
உள்நாடு

யாழில் சிறுமிக்கு பாலியல் தொல்லை குற்றச்சாட்டு – பௌத்த பிக்கு விளக்கமறியலில்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?